• May 18 2024

குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர் வீரர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும்..! நாமல் கோரிக்கை..!samugammedia

Sharmi / Jul 25th 2023, 1:48 pm
image

Advertisement

மத்திய வங்கியின் குண்டுவெடிப்பில் 91 பேரைக் கொன்ற விடுதலைப் புலி பயங்கரவாதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது போன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர் வீரர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'எல்டீடீஈ பயங்கரவாதிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை நான் பார்த்தேன். குறிப்பாகஇ மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதலில் 91 பேரைக் கொன்றுஇ 200க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்திய விடுதலைப் புலி உறுப்பினருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

அந்த புலிச் சந்தேக நபர்களுடன் நானும் மெகசின் சிறைச்சாலையில் இருந்தேன். நான் ரிமாண்டில் இருந்த நேரம் அது. 15, 20 வருடங்களாக விளக்கமறியலில் உள்ளவர்களை ஜனாதிபதி திட்டமிட்டு மன்னிப்பதிலோ அல்லது விடுதலை செய்வதாலோ பிரச்சினை இல்லை.

மறுபுறம், போர்வீரர்கள் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகளாக காணப்பட்டனர். ஜனாதிபதி இந்த மக்களுக்கு மன்னிப்பு வழங்கினால், அது இந்த நேரத்தில் சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஏனென்றால் இந்த அத்தியாயத்தை மூட வேண்டும். புலி பயங்கரவாதிகளுக்கு மட்டும் மன்னிப்பை மட்டுப்படுத்த முடியாது.

போர் வீரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால்இ ஜனாதிபதி அவர்களை மன்னித்து இந்த அத்தியாயத்தை முடிக்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை...' எனவும் தெரிவித்தார்.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர் வீரர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும். நாமல் கோரிக்கை.samugammedia மத்திய வங்கியின் குண்டுவெடிப்பில் 91 பேரைக் கொன்ற விடுதலைப் புலி பயங்கரவாதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது போன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர் வீரர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,'எல்டீடீஈ பயங்கரவாதிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை நான் பார்த்தேன். குறிப்பாகஇ மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதலில் 91 பேரைக் கொன்றுஇ 200க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்திய விடுதலைப் புலி உறுப்பினருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.அந்த புலிச் சந்தேக நபர்களுடன் நானும் மெகசின் சிறைச்சாலையில் இருந்தேன். நான் ரிமாண்டில் இருந்த நேரம் அது. 15, 20 வருடங்களாக விளக்கமறியலில் உள்ளவர்களை ஜனாதிபதி திட்டமிட்டு மன்னிப்பதிலோ அல்லது விடுதலை செய்வதாலோ பிரச்சினை இல்லை.மறுபுறம், போர்வீரர்கள் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகளாக காணப்பட்டனர். ஜனாதிபதி இந்த மக்களுக்கு மன்னிப்பு வழங்கினால், அது இந்த நேரத்தில் சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.ஏனென்றால் இந்த அத்தியாயத்தை மூட வேண்டும். புலி பயங்கரவாதிகளுக்கு மட்டும் மன்னிப்பை மட்டுப்படுத்த முடியாது.போர் வீரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால்இ ஜனாதிபதி அவர்களை மன்னித்து இந்த அத்தியாயத்தை முடிக்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை.' எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement