• May 04 2024

யாழின் முக்கிய பகுதியில் திடீரென களமிறக்கப்பட்ட கலகமடக்கும் பொலிஸார்!

Sharmi / Feb 11th 2023, 2:56 pm
image

Advertisement

இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மையம் கையளிப்பு நிகழ்வு மற்றும் இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் என்பன இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புக்கள் இன்றையதினம் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக நேற்றையதினம் அறிவித்திருந்தன.

இந்நிலையில் யாழ் நகரின் பாதுகாப்பு நேற்றுமாலை முதல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக  யாழ் போதனா வைத்தியசாலை வீதி, மணிக்கூட்டு வீதி, பண்ணை வீதி,  ஏ9 வீதிகளில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்  பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை யாழ் நகர் பகுதியில் சற்றுமுன் பாதுகாப்பு தரப்பினருக்கு மேலதிகமாக கலகமடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழின் முக்கிய பகுதியில் திடீரென களமிறக்கப்பட்ட கலகமடக்கும் பொலிஸார் இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மையம் கையளிப்பு நிகழ்வு மற்றும் இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் என்பன இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளது.இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புக்கள் இன்றையதினம் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக நேற்றையதினம் அறிவித்திருந்தன.இந்நிலையில் யாழ் நகரின் பாதுகாப்பு நேற்றுமாலை முதல் பலப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக  யாழ் போதனா வைத்தியசாலை வீதி, மணிக்கூட்டு வீதி, பண்ணை வீதி,  ஏ9 வீதிகளில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்  பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அதேவேளை யாழ் நகர் பகுதியில் சற்றுமுன் பாதுகாப்பு தரப்பினருக்கு மேலதிகமாக கலகமடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement