• May 05 2024

திரிபோஷாவிற்கு பாரிய தட்டுப்பாடு..! கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் போஷாக்கில் பிரச்சினை..! samugammedia

Chithra / Sep 7th 2023, 1:23 pm
image

Advertisement

 

நாடளாவிய ரீதியில் திரிபோஷாவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளின் போஷாக்கு தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

திரிபோஷ தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதனை உடனடியாக நிறுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகரின் அனுமதியுடன் கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது:

பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா இன்று சரியாக வழங்கப்படுவதில்லை. 

மேலும், திரிபோஷா தொழிற்சாலையையும் தனியார் மயமாக்கும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் நிறுவனங்களின் பட்டியலில் உள்ளது. அந்த நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திரிபோஷா கொடுப்பது எந்த அரசாங்கத்தின் பொறுப்பு. குழந்தைகளின் தாய்மார்களின் ஊட்டச்சத்தில் அக்கறை செலுத்துவது அரசின் பொறுப்பு என்றார்.


திரிபோஷாவிற்கு பாரிய தட்டுப்பாடு. கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் போஷாக்கில் பிரச்சினை. samugammedia  நாடளாவிய ரீதியில் திரிபோஷாவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளின் போஷாக்கு தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.திரிபோஷ தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதனை உடனடியாக நிறுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.சபாநாயகரின் அனுமதியுடன் கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது:பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா இன்று சரியாக வழங்கப்படுவதில்லை. மேலும், திரிபோஷா தொழிற்சாலையையும் தனியார் மயமாக்கும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அந்த நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் நிறுவனங்களின் பட்டியலில் உள்ளது. அந்த நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.திரிபோஷா கொடுப்பது எந்த அரசாங்கத்தின் பொறுப்பு. குழந்தைகளின் தாய்மார்களின் ஊட்டச்சத்தில் அக்கறை செலுத்துவது அரசின் பொறுப்பு என்றார்.

Advertisement

Advertisement

Advertisement