• May 18 2024

இலங்கை மக்களுக்கோ, கடற்றொழிலாளர்களுக்கோ பாதிப்பான சட்டங்கள் உருவாகாது..! – ஈ.பி.டி.பி. உறுதி! samugammedia

Chithra / Nov 10th 2023, 2:43 pm
image

Advertisement

 


கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ, நாடாளுமன்றமோ, இலங்கை மக்களுக்கோ வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கோ பாதிப்பான சட்டங்களை உருவாக்க மாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் சில பிரிவுகளை மாற்றம் செய்வது கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுவது தொடர்பில் ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பிய போது இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

தற்போது சமர்ப்பிக்கபட்ட வரைபு உடனடியாக அமுல்படுத்தப்படாது. அது தொடர்பாக ஆராயப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டே நிறைவேற்றப்படும்.

மேலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நாடாளுமன்றுக்கு அவதூறு பேசாமல் பொது வெளியில் நாடாளுமன்றுக்கு வெளியே வந்து பேச வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.


இலங்கை மக்களுக்கோ, கடற்றொழிலாளர்களுக்கோ பாதிப்பான சட்டங்கள் உருவாகாது. – ஈ.பி.டி.பி. உறுதி samugammedia  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ, நாடாளுமன்றமோ, இலங்கை மக்களுக்கோ வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கோ பாதிப்பான சட்டங்களை உருவாக்க மாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் சில பிரிவுகளை மாற்றம் செய்வது கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுவது தொடர்பில் ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பிய போது இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், தற்போது சமர்ப்பிக்கபட்ட வரைபு உடனடியாக அமுல்படுத்தப்படாது. அது தொடர்பாக ஆராயப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டே நிறைவேற்றப்படும்.மேலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நாடாளுமன்றுக்கு அவதூறு பேசாமல் பொது வெளியில் நாடாளுமன்றுக்கு வெளியே வந்து பேச வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement