சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை இன்று (22) அந்த கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிமுகம் செய்துள்ளார்.
இந்த கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை முதலே பனையூரில் 300 இற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளதுடன் மேலும் விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.
முதலில் அரங்கில் இருந்த தனது பெற்றோரை சந்தித்து ஆசி பெற்ற விஜய், மேடையில் எந்தவிதமான தனி இருக்கையும் அமைக்கப்படாத நிலையில் நிர்வாகிகளுக்கு அமைக்கப்பட்டிருந்த இடத்தில் முதல் வரிசையில் அமர்ந்தார்.
அதனை தொடர்ந்து கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்
பின்னர் நெஞ்சில் கையை வைத்தபடி விஜய் தலைமையில் நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்து அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 40 அடி கம்பத்தில் கொடி ஏற்றினார்.
மேலும் கீழும் சிவப்பு நிறம் இருக்க, நடுவில் மஞ்சள் நிறத்துடன் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொடியின் நடுவில் இருபக்கமும் போர் யானை இருக்க, நடுவில் வட்ட வடிவில் வெற்றியை குறிக்கும் வாகை மலர் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகம் செய்த விஜய் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை இன்று (22) அந்த கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிமுகம் செய்துள்ளார். இந்த கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.இன்று காலை முதலே பனையூரில் 300 இற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளதுடன் மேலும் விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.முதலில் அரங்கில் இருந்த தனது பெற்றோரை சந்தித்து ஆசி பெற்ற விஜய், மேடையில் எந்தவிதமான தனி இருக்கையும் அமைக்கப்படாத நிலையில் நிர்வாகிகளுக்கு அமைக்கப்பட்டிருந்த இடத்தில் முதல் வரிசையில் அமர்ந்தார்.அதனை தொடர்ந்து கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார் பின்னர் நெஞ்சில் கையை வைத்தபடி விஜய் தலைமையில் நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்து அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 40 அடி கம்பத்தில் கொடி ஏற்றினார்.மேலும் கீழும் சிவப்பு நிறம் இருக்க, நடுவில் மஞ்சள் நிறத்துடன் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொடியின் நடுவில் இருபக்கமும் போர் யானை இருக்க, நடுவில் வட்ட வடிவில் வெற்றியை குறிக்கும் வாகை மலர் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.