• May 18 2024

இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கை..! ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் காரசாரம்..!samugammedia

Sharmi / May 31st 2023, 11:44 am
image

Advertisement

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு  கூட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பில் விவாதிக்கப்பட்ட போது, கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் கடற்படை அதிகாரியிடம் கேள்வி கேட்கப் பட்டது.

குறிப்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து தெரிவிக்கையில்,

வரவு செலவுத் திட்டத்தில் 20 வீதமான  நிதி பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒதுக்கப்படுகின்றது. ஆனால் பிறிதொரு நாட்டு படகுகள் எமது நாட்டுக்குள் வருகை தருவதினை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் நீங்கள் தேசிய பாதுகாப்பினை  செயற்படுத்தவில்லை.

யுத்த காலத்தில் வட பகுதியில் மீனவர்கள் சுதந்திரமாக தமது மீன்பிடி செயல்பாட்டை முன்னெடுத்தார்கள். ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் தான் இந்த இந்திய இழுவை மீனவர்களின் பிரச்சனை காணப்படுகின்றது. யுத்த காலத்தில் இந்த எந்த ஒரு பிரச்சனையும் இங்கே காணப்படவில்லை.

எனவே கடற்படையானது தேசிய பாதுகாப்பினை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் இந்திய படகுகளை கட்டிப்படுத்தும் விடயத்தில் ஏன் தயங்குகிறார்கள் என்பது தொடர்பில் எனவே பாராளுமன்றத்தில் தெரியப்படுத்தவுள்ளோம் - என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன்,

உங்களிடம் ஆளணி இல்லை என்றால் ஏன்  அதனை ஏற்கனவே தெரியப்படுத்தவில்லை கடற்படை உள்ளூர் மீனவர்களின்  வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு உங்களுடைய செயற்பாடு உள்ளது வேறு நாட்டின் படகு உள்ளே வருகின்றது என்றால் தேசிய பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது என்பதை நாங்கள் பார்க்க முடிகின்றது

எனவே குறித்த விடயம் தொடர்பில் அடுத்த கூட்டத்திற்கு வரும்போது  இந்த இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையால் என்ன செய்ய முடியும்  என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரினர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கை. ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் காரசாரம்.samugammedia யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு  கூட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பில் விவாதிக்கப்பட்ட போது, கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் கடற்படை அதிகாரியிடம் கேள்வி கேட்கப் பட்டது.குறிப்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து தெரிவிக்கையில், வரவு செலவுத் திட்டத்தில் 20 வீதமான  நிதி பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒதுக்கப்படுகின்றது. ஆனால் பிறிதொரு நாட்டு படகுகள் எமது நாட்டுக்குள் வருகை தருவதினை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் நீங்கள் தேசிய பாதுகாப்பினை  செயற்படுத்தவில்லை.யுத்த காலத்தில் வட பகுதியில் மீனவர்கள் சுதந்திரமாக தமது மீன்பிடி செயல்பாட்டை முன்னெடுத்தார்கள். ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் தான் இந்த இந்திய இழுவை மீனவர்களின் பிரச்சனை காணப்படுகின்றது. யுத்த காலத்தில் இந்த எந்த ஒரு பிரச்சனையும் இங்கே காணப்படவில்லை.எனவே கடற்படையானது தேசிய பாதுகாப்பினை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் இந்திய படகுகளை கட்டிப்படுத்தும் விடயத்தில் ஏன் தயங்குகிறார்கள் என்பது தொடர்பில் எனவே பாராளுமன்றத்தில் தெரியப்படுத்தவுள்ளோம் - என்றார்.இதன்போது கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன், உங்களிடம் ஆளணி இல்லை என்றால் ஏன்  அதனை ஏற்கனவே தெரியப்படுத்தவில்லை கடற்படை உள்ளூர் மீனவர்களின்  வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு உங்களுடைய செயற்பாடு உள்ளது வேறு நாட்டின் படகு உள்ளே வருகின்றது என்றால் தேசிய பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது என்பதை நாங்கள் பார்க்க முடிகின்றதுஎனவே குறித்த விடயம் தொடர்பில் அடுத்த கூட்டத்திற்கு வரும்போது  இந்த இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையால் என்ன செய்ய முடியும்  என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரினர்.

Advertisement

Advertisement

Advertisement