• Jul 04 2024

‘Visit Sri Lanka’ விரைவில்..! சமையற்கலைப் பாடசாலைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை samugammedia

Chithra / Jul 25th 2023, 7:17 am
image

Advertisement

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் அதிக கொள்வனவு ஆற்றல் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் அரசாங்கத்தின் புதிய சுற்றுலா மூலோபாயமான Visit Sri Lanka திட்டம் அடுத்த சில மாதங்களில் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் (23) நடைபெற்ற Bocus d’Or 2023 போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நாம் புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். வங்குரோத்து நிலையில் மீண்ட பின்னர் நமக்கு போதியளவு அந்நியச் செலாவணி அவசியம். அனைத்தும் எளிதில் கிடைக்காது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நிபந்தனைகள் உள்ளன. பணத்தை சம்பாதிக்கும் வகையில் நமது சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகை தருவது போதாது. வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதை நாம் இலக்காகக் கொண்டுள்ளோம்.

அவர்களில் 2.5 மில்லியன் பேர் பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்யக் கூடிய ஆற்றலுள்ள சுற்றுலாப் பயணிகளாக இருக்க வேண்டும். 

இந்திய மதிப்பீட்டின்படி, இலங்கைக்கு வருடாந்தம் சுமார் 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர முடியும், அவர்களில் பெரும்பாலோர் ஆசிய மற்றும் இந்து சமுத்திரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பர். எனவே, சுற்றுலாத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கிறோம்.

இன்று போட்டியில் பங்கேற்ற இளைஞர்களில் பலர் இன்னும் மூன்று வருடங்களில் இலங்கையை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது. இவர்களை இந்த நாட்டில் தங்க வைப்பதற்கு மாலைதீவில் உள்ள ஹோட்டல்களில் வழங்கப்படும் மட்டத்திற்கு சம்பளத்தையும் வழங்க வேண்டும்.

நாம் இலக்காகக் கொண்டுள்ள 5 மில்லியன் மற்றும் 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளிடையே பல்வேறு வகையான சுற்றுலாப் பயணிகள் இருக்கலாம். 


நம் நாடு சமையற் கலைச் சுற்றுலாவுக்கு சிறந்த பின்னணியைக் கொண்டுள்ளது. நமது சுற்றுலாத் துறையில் சமையற் கலைச் சுற்றுலாவை இலக்காகக் கொண்டால், ஆசியாவில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருவார்கள். அதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அதற்கான, அதிகளவிலான பணியாளர்களை பயிற்றுவிக்க வேண்டும். அதற்குரிய பாடசாலைகளையும் நாம் மேம்படுத்த வேண்டும். மேலும் தனியார்துறை பங்களிப்புடன் சமையற்கலை பாடசாலையொன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

அரசாங்கம் தனியாக அனைத்தையும் செய்யும் வரையில் பார்த்துக்கொண்டிருக்க கூடாது. இதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும். தற்போதும் பல பிரதேசங்களில் அரச மற்றும் தனியார் துறை ஒன்றிணைந்து முன்னெடுக்கும் சமயற்கலை தொடர்பிலான பாடசாலைகள் இயங்குகின்றன.


‘Visit Sri Lanka’ விரைவில். சமையற்கலைப் பாடசாலைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை samugammedia நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் அதிக கொள்வனவு ஆற்றல் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் அரசாங்கத்தின் புதிய சுற்றுலா மூலோபாயமான Visit Sri Lanka திட்டம் அடுத்த சில மாதங்களில் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் (23) நடைபெற்ற Bocus d’Or 2023 போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.நாம் புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். வங்குரோத்து நிலையில் மீண்ட பின்னர் நமக்கு போதியளவு அந்நியச் செலாவணி அவசியம். அனைத்தும் எளிதில் கிடைக்காது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நிபந்தனைகள் உள்ளன. பணத்தை சம்பாதிக்கும் வகையில் நமது சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.ஆண்டுதோறும் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகை தருவது போதாது. வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதை நாம் இலக்காகக் கொண்டுள்ளோம்.அவர்களில் 2.5 மில்லியன் பேர் பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்யக் கூடிய ஆற்றலுள்ள சுற்றுலாப் பயணிகளாக இருக்க வேண்டும். இந்திய மதிப்பீட்டின்படி, இலங்கைக்கு வருடாந்தம் சுமார் 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர முடியும், அவர்களில் பெரும்பாலோர் ஆசிய மற்றும் இந்து சமுத்திரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பர். எனவே, சுற்றுலாத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கிறோம்.இன்று போட்டியில் பங்கேற்ற இளைஞர்களில் பலர் இன்னும் மூன்று வருடங்களில் இலங்கையை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது. இவர்களை இந்த நாட்டில் தங்க வைப்பதற்கு மாலைதீவில் உள்ள ஹோட்டல்களில் வழங்கப்படும் மட்டத்திற்கு சம்பளத்தையும் வழங்க வேண்டும்.நாம் இலக்காகக் கொண்டுள்ள 5 மில்லியன் மற்றும் 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளிடையே பல்வேறு வகையான சுற்றுலாப் பயணிகள் இருக்கலாம். நம் நாடு சமையற் கலைச் சுற்றுலாவுக்கு சிறந்த பின்னணியைக் கொண்டுள்ளது. நமது சுற்றுலாத் துறையில் சமையற் கலைச் சுற்றுலாவை இலக்காகக் கொண்டால், ஆசியாவில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருவார்கள். அதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.அதற்கான, அதிகளவிலான பணியாளர்களை பயிற்றுவிக்க வேண்டும். அதற்குரிய பாடசாலைகளையும் நாம் மேம்படுத்த வேண்டும். மேலும் தனியார்துறை பங்களிப்புடன் சமையற்கலை பாடசாலையொன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.அரசாங்கம் தனியாக அனைத்தையும் செய்யும் வரையில் பார்த்துக்கொண்டிருக்க கூடாது. இதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும். தற்போதும் பல பிரதேசங்களில் அரச மற்றும் தனியார் துறை ஒன்றிணைந்து முன்னெடுக்கும் சமயற்கலை தொடர்பிலான பாடசாலைகள் இயங்குகின்றன.

Advertisement

Advertisement

Advertisement