• May 05 2024

ஜனநாயக உரிமைக்காக ஒரு இரத்தச் சொட்டுகூட விழாது போராடினோம்- பிமல் ரத்நாயக்க கருத்து!SamugamMedia

Sharmi / Feb 27th 2023, 4:00 pm
image

Advertisement

நீதிமன்ற உத்தரவை மீறி தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்த போராட்டத்தை நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் உட்படுத்தி சிலரை கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

பெயர்களை குறிப்பிட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது பாரிய தவறு என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமைகளான கருத்துக்களை வெளியிடும் உரிமையை மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடாத வகையில் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வி எழுப்பபட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் வழக்குகள் குறித்து வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என குறிப்பிட்ட பிமல் ரத்நாயக்கதமது ஜனநாயக உரிமைக்காக ஒரு இரத்தச் சொட்டுகூட விழாது உரிய முறையில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்ததாக குறிப்பிட்டார்

ஜனநாயக உரிமைக்காக ஒரு இரத்தச் சொட்டுகூட விழாது போராடினோம்- பிமல் ரத்நாயக்க கருத்துSamugamMedia நீதிமன்ற உத்தரவை மீறி தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்த போராட்டத்தை நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் உட்படுத்தி சிலரை கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.பெயர்களை குறிப்பிட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது பாரிய தவறு என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.அரசியலமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமைகளான கருத்துக்களை வெளியிடும் உரிமையை மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடாத வகையில் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வி எழுப்பபட்டிருந்தது.நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் வழக்குகள் குறித்து வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என குறிப்பிட்ட பிமல் ரத்நாயக்கதமது ஜனநாயக உரிமைக்காக ஒரு இரத்தச் சொட்டுகூட விழாது உரிய முறையில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்ததாக குறிப்பிட்டார்

Advertisement

Advertisement

Advertisement