இனவாதத்தை குறிப்பிட்டு மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை கட்டியெழுப்ப வேண்டாம். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக்க சம்பத் தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் அவர் மேலும் தெரவிக்கையில்,
75 வருடங்களாக இந்த நாடு சாதாரணமாகச் செல்லவில்லை. லஞ்சம், ஊழல் போன்ற செயல்களால் நிறைந்து இருந்தது.
ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிற்பாடு கிளர்ச்சி ஒன்று ஏற்பட்டது. இதனால் நாடு பின்னோக்கிச் செல்லப்பட்டது.
கறுப்பு ஜீலை வந்தது. இதனால் தமிழ் கட்சிகள் பின்னோக்கிச் சென்றார்கள். 30 வருடகால சாபக்கேடான யுத்தம் இந்த நாட்டை மேலும் பின்னோக்கிச் செல்ல வைத்தது.
சுனாமி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா மற்றும் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தொழிற்சங்க போராட்டங்கள் போன்ற கசப்பான சம்பவங்கள் நாட்டை பின்னோக்கித் தள்ளியது. இதுவே நாட்டிற்கு சாபக்கேடாக அமைந்தது.
88-89 களில் இளைஞர் கிளர்ச்சி ஏற்பட்டது. இக் கிளர்ச்சிகளினால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புக்கள் சொல்லிவிட முடியாது. இச் சாபக்கேட்டிலிருந்து நாட்டை மீட்டு, மீண்டும் கட்டியெழுப்பும் தருணத்தில் அதற்கு நாம் முன்வருகின்றோம்.
இனவாதத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நாட்டில் பல சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இனவாதத்தை குறிப்பிட்டு மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை கட்டியெழுப்ப வேண்டாம்.அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.
மனிதன் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வான். ஆனால் அதிகாரம் மனிதனை துஸ்பிரயோகம் செய்யும். ஆகவே நாட்டை முன்னேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
இனவாதத்தை குறிப்பிட்டு மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க இடமளிக்க மாட்டோம் - சானக்க சம்பத் எம்.பி பகிரங்கம் இனவாதத்தை குறிப்பிட்டு மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை கட்டியெழுப்ப வேண்டாம். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக்க சம்பத் தெரிவித்தார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் அவர் மேலும் தெரவிக்கையில்,75 வருடங்களாக இந்த நாடு சாதாரணமாகச் செல்லவில்லை. லஞ்சம், ஊழல் போன்ற செயல்களால் நிறைந்து இருந்தது. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிற்பாடு கிளர்ச்சி ஒன்று ஏற்பட்டது. இதனால் நாடு பின்னோக்கிச் செல்லப்பட்டது.கறுப்பு ஜீலை வந்தது. இதனால் தமிழ் கட்சிகள் பின்னோக்கிச் சென்றார்கள். 30 வருடகால சாபக்கேடான யுத்தம் இந்த நாட்டை மேலும் பின்னோக்கிச் செல்ல வைத்தது. சுனாமி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா மற்றும் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தொழிற்சங்க போராட்டங்கள் போன்ற கசப்பான சம்பவங்கள் நாட்டை பின்னோக்கித் தள்ளியது. இதுவே நாட்டிற்கு சாபக்கேடாக அமைந்தது. 88-89 களில் இளைஞர் கிளர்ச்சி ஏற்பட்டது. இக் கிளர்ச்சிகளினால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புக்கள் சொல்லிவிட முடியாது. இச் சாபக்கேட்டிலிருந்து நாட்டை மீட்டு, மீண்டும் கட்டியெழுப்பும் தருணத்தில் அதற்கு நாம் முன்வருகின்றோம். இனவாதத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நாட்டில் பல சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இனவாதத்தை குறிப்பிட்டு மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை கட்டியெழுப்ப வேண்டாம்.அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். மனிதன் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வான். ஆனால் அதிகாரம் மனிதனை துஸ்பிரயோகம் செய்யும். ஆகவே நாட்டை முன்னேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.