• May 04 2024

தமிழ் இனப்படுகொலைக்கு ஏன் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவில்லை...! சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி...!samugammedia

Sharmi / Sep 8th 2023, 11:08 am
image

Advertisement

பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆவணப்படம் தொடர்பில் எல்லோரும் அறிந்த விடயத்தை சர்வதேச ஊடகம் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

யாழில் நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏப்ரல் 21 தாக்குதல் விடயத்திற்கு சர்வதேச விசாரணை கோரிக்கையை வரவேற்கிறோம். அதனை தொடர்ந்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்பியதும் வரவேற்கத்தக்கது.

சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் எல்லோரும் அறிந்த விடயத்தை சர்வதேச ஊடகம் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறோம். ஏப்ரல் 21 தாக்குதலுக்கு ஒரு சர்வதேச விசாரணையை முன் வைக்கும் போது எங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு ஏன் இன்று வரை ஒரு சர்வதேச விசாரணையை மேற்கொள்ள முன்வரவில்லை என தெரிவித்தார்.

அதேவேளை சனல்4 வெளியிட்ட தகவலின்படி அரச.புலனாய்வாளர்களும் ஒட்டுக்குழுக்களும் இணைந்து ஆட்சி மாற்றத்திற்காக குறித்த சம்பவத்தை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

குறித்த குண்டுவெடிப்பில் வெளிநாட்டவர்கள் உட்பட  269 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இது சர்வதேச விசாரணை மூலம் விசாரிக்கப்பட வேண்டும்.  இதேபோல் இதற்கு சர்வதேச விசாரணையை எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்றத்தில் கோரியுள்ளார்.

இதேபோல் ஊடகவியளாளர் இசைப்பிரியா உட்பட சிறுவர்கள் பலர் உடைகள் களையப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட காணொலிகளையும் வெளியிட்டிருந்தது.   

இவற்றுடன் யோசப் பரராஜசிங்கம் மற்றும் ரவிராஜ் ஆகியோர் ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலில் கொலை செய்யப்பட்டதால் தான் குற்றவாளிகள் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை.

தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற நாடுகளின் முயற்சி மூலம் சர்வதேச விசாரணையை நடாத்த முடியும்.  பூகோள போட்டிநிலை தற்போது இலங்கையில் நிலவுவதால் சில நாடுகளை தங்கள் அணுசரணையாளர்களாக வைத்து சில விடயங்களை கொண்டு செல்கின்றனர் எனவும் தெரிவித்தார்.





தமிழ் இனப்படுகொலைக்கு ஏன் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவில்லை. சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி.samugammedia பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆவணப்படம் தொடர்பில் எல்லோரும் அறிந்த விடயத்தை சர்வதேச ஊடகம் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.யாழில் நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஏப்ரல் 21 தாக்குதல் விடயத்திற்கு சர்வதேச விசாரணை கோரிக்கையை வரவேற்கிறோம். அதனை தொடர்ந்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்பியதும் வரவேற்கத்தக்கது.சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் எல்லோரும் அறிந்த விடயத்தை சர்வதேச ஊடகம் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறோம். ஏப்ரல் 21 தாக்குதலுக்கு ஒரு சர்வதேச விசாரணையை முன் வைக்கும் போது எங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு ஏன் இன்று வரை ஒரு சர்வதேச விசாரணையை மேற்கொள்ள முன்வரவில்லை என தெரிவித்தார்.அதேவேளை சனல்4 வெளியிட்ட தகவலின்படி அரச.புலனாய்வாளர்களும் ஒட்டுக்குழுக்களும் இணைந்து ஆட்சி மாற்றத்திற்காக குறித்த சம்பவத்தை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. குறித்த குண்டுவெடிப்பில் வெளிநாட்டவர்கள் உட்பட  269 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இது சர்வதேச விசாரணை மூலம் விசாரிக்கப்பட வேண்டும்.  இதேபோல் இதற்கு சர்வதேச விசாரணையை எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்றத்தில் கோரியுள்ளார். இதேபோல் ஊடகவியளாளர் இசைப்பிரியா உட்பட சிறுவர்கள் பலர் உடைகள் களையப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட காணொலிகளையும் வெளியிட்டிருந்தது.   இவற்றுடன் யோசப் பரராஜசிங்கம் மற்றும் ரவிராஜ் ஆகியோர் ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலில் கொலை செய்யப்பட்டதால் தான் குற்றவாளிகள் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற நாடுகளின் முயற்சி மூலம் சர்வதேச விசாரணையை நடாத்த முடியும்.  பூகோள போட்டிநிலை தற்போது இலங்கையில் நிலவுவதால் சில நாடுகளை தங்கள் அணுசரணையாளர்களாக வைத்து சில விடயங்களை கொண்டு செல்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement