• Jan 11 2025

வெளிநாட்டிலுள்ள கணவனை அச்சுறுத்திய மனைவிக்கு இறுதியில் நடந்த துயரம்

Chithra / Jan 8th 2025, 7:07 am
image

 

வெளிநாட்டில் உள்ள கணவனை அச்சுறுத்தும் வகையில் விளையாட்டாக செய்த நாடகத்தால் இளம் குடும்பம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முல்லேரியா பகுதியைச்  சேர்ந்த பெண்ணொருவர் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்வதாக நடித்த வேளையில், உண்மையாகவே உயிரிழந்துள்ளார்.

அங்கொட கொடல்ல மாவத்தையில் வசித்து வந்த 28 வயதுடைய அனுத்தரா சிறிமான்ன என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

படுக்கையில் கதிரையை வைத்து, அதன் மேல் ஏறி, மேற்கூரையில் தொங்கிய கயிற்றை கழுத்தில் போட்டு, போலியாக உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

எதிர்பாராத விதமாக கதிரை கவிழ்ந்ததில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கணவர் உதவியுடன் கட்டிய புது வீட்டின் புதுமனை புகுவிழா எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டிலுள்ள கணவனை அச்சுறுத்திய மனைவிக்கு இறுதியில் நடந்த துயரம்  வெளிநாட்டில் உள்ள கணவனை அச்சுறுத்தும் வகையில் விளையாட்டாக செய்த நாடகத்தால் இளம் குடும்பம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.முல்லேரியா பகுதியைச்  சேர்ந்த பெண்ணொருவர் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்வதாக நடித்த வேளையில், உண்மையாகவே உயிரிழந்துள்ளார்.அங்கொட கொடல்ல மாவத்தையில் வசித்து வந்த 28 வயதுடைய அனுத்தரா சிறிமான்ன என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.படுக்கையில் கதிரையை வைத்து, அதன் மேல் ஏறி, மேற்கூரையில் தொங்கிய கயிற்றை கழுத்தில் போட்டு, போலியாக உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.எதிர்பாராத விதமாக கதிரை கவிழ்ந்ததில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.கணவர் உதவியுடன் கட்டிய புது வீட்டின் புதுமனை புகுவிழா எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement