• May 18 2024

தமிழ் மக்கள் எவ்வித தீர்வுமற்று அம்மணமாக நிற்பதா? 13ஐ அமுல்படுத்தினால் என்ன தீமை என்பதை வெளிப்படுத்துங்கள்! சிவஞானம் சீற்றம்

Chithra / Feb 9th 2023, 3:06 pm
image

Advertisement

சமகாலத்தில் 13 ஐ அமுல் செய்தால் சிங்களத்திற்கும் பௌத்தத்திற்கும் என்ன தீமை என்ற கருத்துக்கள் வெளிவந்தவண்ணமுளது. அந்த வகையில் இதை அமுல்படுத்தினால் எவ்விதமான தீமை ஏற்படுமென்பதை பௌத்த பிக்குகள், விமல் வீரவன்ச, உதய கம்பன்பில மற்றும் சரத் வீரசிங்க ஆகியோர் வெளிப்படுத்த வேண்டும் என தமிழரசுக் கட்சியின் செயளாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இவற்றுடன் எம்மவர்கள் 13ஐ உச்சரிக்க வேண்டாம் என்றும் சிங்களத் தரப்பு 13ஐ வழங்க வேண்டாம் என்றும் கோசமிட்டால் தமிழ் மக்கள் எவ்வித தீர்வுமற்று அம்மணமாக நிற்பதா? 

எமது கோரிக்கை சுயாட்சி மற்றும் சுய நிர்வாகத்தை கோருகின்றோம். அது ஒற்றையாட்சிக்குள்ளோ இரட்டை ஆட்சிக்குள்ளோ அமைந்து அதிகாரங்கள் எம்மிடமிருந்து மீளப் பறிமுதல் செய்யமுடியாதபடி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

பிக்குமாரின் கோசத்தை ரணிலும் ஏற்று, பண்டாரநாயக்கா போல் செயற்பட்டால் ஒருபோதும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாது.

இந்தியாவானது அமெரிக்கா போன்ற ஏனைய நாடுகளை உந்துதலுக்குட்படுத்தி தீர்வை பெற்று தர முடியும். எனவே மேற்கத்தைய நாடுகளினூடாட  இந்தியா செயற்பட்டு 13 ம் திருத்தச்சட்டத்திற்கு மேலான தீர்வுக்கு நகர வேண்டும். 

ரணில் நல்நோக்குடன் செயற்பட்டாலும்  அவருக்கு அதை தீர்க்குமுகமாக அதிகாரங்கள் ஆதரவுகள் மற்றும் பாராளுமன்ற ஆதரவு இருக்கா என்பது தொடர்பில் கேள்வி எழுகின்றது. 

கடந்த 5 வருடங்களுக்கு மேலாக ஒற்றையாட்சி, இரட்டையாட்சி போன்ற சொல்லாடல்களே தீர்வானது பின்னடைவை அடைந்தவண்ணமுள்ளது. ஆகவே எவ் முறைமையாயின் தீர்வினைப் பெற்றுத்தர முற்பட வேண்டும்.

அதேவேளை தமிழரசுக் கட்சி தொடர்பிலும் எதிர்வரும் தேர்தல் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கையில்,

சில்லறைக் கட்சிகளே யாழ் மாநகர சபைத் தேர்தலுக்கான முதன்மை வேட்பாளரை அறிவித்த நிலையில், பிரதானமாகக் காணப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மிக விரைவில் முதன்மை வேட்பாளர் தொடர்பில் வெளியிடும்.  

இதனுடன் அண்மையில்  தமிழரசுக் கட்சிக்கு எதிரானவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மைய ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கு  பதிலளிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் தலைமை யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில், சூழ்நிலைக் கைதியாகத் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். அண்மையிலும் வாலிப முன்னணி தலைவர் சேயோனும் தலைவருக்கு கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் கடிதமொன்றை எழுதியிருந்தார். 

அக்கதை திரிபடைந்து அவர்கட்சியிலிருந்து விலகிவிட்டதாகத் தகவல்கள் பரப்பப்பட்டன. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான விடயம்.  நான் அறிந்த காலம் முதல் தமிழரசுக் கட்சியனாது இதுவரை காலமும் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் செயற்படும் கட்சியாக காணப்படவில்லை.

இதை விட தமிழரசுக் கட்சியானது,  1954ம்  ஆண்டுக்கு  முற்பட்ட ஆண்டிலிருந்தே சுதந்திர தினத்தை கரி நாளாகக் கடைப்பிடித்து வருகின்றது. 

அதே சமகாலப்பகுதியிலும் கடையடைப்பு போராட்டங்களை நடத்தியிருந்தோம் அத் தருணத்தில் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் கடைகளை பூட்ட விடாது தடுத்த வரலாறுகள் இனறு பல தரப்புக்குத் தெரியாது என்றார்.

தமிழ் மக்கள் எவ்வித தீர்வுமற்று அம்மணமாக நிற்பதா 13ஐ அமுல்படுத்தினால் என்ன தீமை என்பதை வெளிப்படுத்துங்கள் சிவஞானம் சீற்றம் சமகாலத்தில் 13 ஐ அமுல் செய்தால் சிங்களத்திற்கும் பௌத்தத்திற்கும் என்ன தீமை என்ற கருத்துக்கள் வெளிவந்தவண்ணமுளது. அந்த வகையில் இதை அமுல்படுத்தினால் எவ்விதமான தீமை ஏற்படுமென்பதை பௌத்த பிக்குகள், விமல் வீரவன்ச, உதய கம்பன்பில மற்றும் சரத் வீரசிங்க ஆகியோர் வெளிப்படுத்த வேண்டும் என தமிழரசுக் கட்சியின் செயளாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இவற்றுடன் எம்மவர்கள் 13ஐ உச்சரிக்க வேண்டாம் என்றும் சிங்களத் தரப்பு 13ஐ வழங்க வேண்டாம் என்றும் கோசமிட்டால் தமிழ் மக்கள் எவ்வித தீர்வுமற்று அம்மணமாக நிற்பதா எமது கோரிக்கை சுயாட்சி மற்றும் சுய நிர்வாகத்தை கோருகின்றோம். அது ஒற்றையாட்சிக்குள்ளோ இரட்டை ஆட்சிக்குள்ளோ அமைந்து அதிகாரங்கள் எம்மிடமிருந்து மீளப் பறிமுதல் செய்யமுடியாதபடி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.பிக்குமாரின் கோசத்தை ரணிலும் ஏற்று, பண்டாரநாயக்கா போல் செயற்பட்டால் ஒருபோதும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாது.இந்தியாவானது அமெரிக்கா போன்ற ஏனைய நாடுகளை உந்துதலுக்குட்படுத்தி தீர்வை பெற்று தர முடியும். எனவே மேற்கத்தைய நாடுகளினூடாட  இந்தியா செயற்பட்டு 13 ம் திருத்தச்சட்டத்திற்கு மேலான தீர்வுக்கு நகர வேண்டும். ரணில் நல்நோக்குடன் செயற்பட்டாலும்  அவருக்கு அதை தீர்க்குமுகமாக அதிகாரங்கள் ஆதரவுகள் மற்றும் பாராளுமன்ற ஆதரவு இருக்கா என்பது தொடர்பில் கேள்வி எழுகின்றது. கடந்த 5 வருடங்களுக்கு மேலாக ஒற்றையாட்சி, இரட்டையாட்சி போன்ற சொல்லாடல்களே தீர்வானது பின்னடைவை அடைந்தவண்ணமுள்ளது. ஆகவே எவ் முறைமையாயின் தீர்வினைப் பெற்றுத்தர முற்பட வேண்டும்.அதேவேளை தமிழரசுக் கட்சி தொடர்பிலும் எதிர்வரும் தேர்தல் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கையில்,சில்லறைக் கட்சிகளே யாழ் மாநகர சபைத் தேர்தலுக்கான முதன்மை வேட்பாளரை அறிவித்த நிலையில், பிரதானமாகக் காணப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மிக விரைவில் முதன்மை வேட்பாளர் தொடர்பில் வெளியிடும்.  இதனுடன் அண்மையில்  தமிழரசுக் கட்சிக்கு எதிரானவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மைய ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கு  பதிலளிக்கையில்,தமிழரசுக் கட்சியின் தலைமை யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில், சூழ்நிலைக் கைதியாகத் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். அண்மையிலும் வாலிப முன்னணி தலைவர் சேயோனும் தலைவருக்கு கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் கடிதமொன்றை எழுதியிருந்தார். அக்கதை திரிபடைந்து அவர்கட்சியிலிருந்து விலகிவிட்டதாகத் தகவல்கள் பரப்பப்பட்டன. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான விடயம்.  நான் அறிந்த காலம் முதல் தமிழரசுக் கட்சியனாது இதுவரை காலமும் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் செயற்படும் கட்சியாக காணப்படவில்லை.இதை விட தமிழரசுக் கட்சியானது,  1954ம்  ஆண்டுக்கு  முற்பட்ட ஆண்டிலிருந்தே சுதந்திர தினத்தை கரி நாளாகக் கடைப்பிடித்து வருகின்றது. அதே சமகாலப்பகுதியிலும் கடையடைப்பு போராட்டங்களை நடத்தியிருந்தோம் அத் தருணத்தில் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் கடைகளை பூட்ட விடாது தடுத்த வரலாறுகள் இனறு பல தரப்புக்குத் தெரியாது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement