• May 11 2024

வட் வரி அதிகரிப்பால் மின் கட்டணம் உட்பட பல துறைகளுக்கு பாதிப்பா..? சபையில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு samugammedia

Chithra / Nov 17th 2023, 12:57 pm
image

Advertisement

 

வட் வரி அதிகரிக்கப்பட்டாலும் அது மின்சார கட்டணம் உள்ளிட்டவற்றில் தாக்கம் செலுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி, இதுவரை வட் வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு புதிதாக வட் வரி அறவிடப் போகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியிருந்தார்.

அத்துடன், “உதாரணமாக சம்பளம் 100 ரூபா அதிகரிக்குமாயின் வரி 600 ரூபாயாக அதிகரிக்கும். 

வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு வரி அறவிடப் போகின்றனர். 

தொலைபேசி, கணனி, அனைத்து மின்சாதன பொருட்களுக்கும் வரி அறவிடப் போகின்றனர்” எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனவரி மாதம் வட் வரி அதிகரிக்கப்பட்டாலும் மின்சார கட்டணம் உட்பட பல துறைகளில் அது பாதிப்பை ஏற்படுத்தாது என சுட்டக்காட்டியுள்ளார்.

வட் வரி அதிகரிப்பால் மின் கட்டணம் உட்பட பல துறைகளுக்கு பாதிப்பா. சபையில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு samugammedia  வட் வரி அதிகரிக்கப்பட்டாலும் அது மின்சார கட்டணம் உள்ளிட்டவற்றில் தாக்கம் செலுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி, இதுவரை வட் வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு புதிதாக வட் வரி அறவிடப் போகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியிருந்தார்.அத்துடன், “உதாரணமாக சம்பளம் 100 ரூபா அதிகரிக்குமாயின் வரி 600 ரூபாயாக அதிகரிக்கும். வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு வரி அறவிடப் போகின்றனர். தொலைபேசி, கணனி, அனைத்து மின்சாதன பொருட்களுக்கும் வரி அறவிடப் போகின்றனர்” எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறித்த விடயத்தை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,ஜனவரி மாதம் வட் வரி அதிகரிக்கப்பட்டாலும் மின்சார கட்டணம் உட்பட பல துறைகளில் அது பாதிப்பை ஏற்படுத்தாது என சுட்டக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement