• May 04 2024

எதிர்காலத்தில் தேர்தலின் போது பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்...! சூரியகுமாரி கோரிக்கை...! samugammedia

Sharmi / Oct 16th 2023, 9:30 pm
image

Advertisement

அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே அதிகம் காணப்படுவதாக காணப்படுவதாக கணபதி பிள்ளையை சூரியகுமாரி தெரிவித்தார்.

அரசியலுக்கு கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்கள்  பாதிக்கப்படுகின்றார்கள் பெண்களை எவ்வாறு பார்க்கின்றார்கள் என்பது பற்றி நாங்கள் நன்று அறிந்து உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் அரசியலுக்கான தடைகளை கலைந்தெரிவோம் எனும் தொனிப்பொருளில் தேசிய ஒற்றுமைக்கான அபிவிருத்தி மன்றத்தினால்  வெகுஜன ஊடக ஒத்துழைப்பு செயல் திட்டம் மற்றும் ஊடக கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள மல்லிகா ஹோட்டலில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே  அவர் இவ்விடத்தை குறிப்பிட்டார்.

பெண்களை  வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வேறு நாடுகளில் பெண்களின் விகிதாசாரம் அதிகளவில் இருப்பதாகவும் இலங்கையில் 40க்கும் மேற்பட்ட விகிதாசாரத்தில் பெண்கள் இருக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் தேர்தலின் போது பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் எப்போதும் பெண்கள் சமையலறையில் இருப்பதை மட்டும் விரும்பவில்லை எனவும் அங்கு பங்கேற்ற பெண்கள் அதிக அளவில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் தேசிய ஒற்றுமைக்கான அபிவிருத்தி மன்றத்தின்  பிரதிநிதி கே.சுறங்க மற்றும் பிரதேச பெண் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்

எதிர்காலத்தில் தேர்தலின் போது பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். சூரியகுமாரி கோரிக்கை. samugammedia அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே அதிகம் காணப்படுவதாக காணப்படுவதாக கணபதி பிள்ளையை சூரியகுமாரி தெரிவித்தார்.அரசியலுக்கு கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்கள்  பாதிக்கப்படுகின்றார்கள் பெண்களை எவ்வாறு பார்க்கின்றார்கள் என்பது பற்றி நாங்கள் நன்று அறிந்து உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பெண்களின் அரசியலுக்கான தடைகளை கலைந்தெரிவோம் எனும் தொனிப்பொருளில் தேசிய ஒற்றுமைக்கான அபிவிருத்தி மன்றத்தினால்  வெகுஜன ஊடக ஒத்துழைப்பு செயல் திட்டம் மற்றும் ஊடக கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள மல்லிகா ஹோட்டலில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே  அவர் இவ்விடத்தை குறிப்பிட்டார்.பெண்களை  வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.வேறு நாடுகளில் பெண்களின் விகிதாசாரம் அதிகளவில் இருப்பதாகவும் இலங்கையில் 40க்கும் மேற்பட்ட விகிதாசாரத்தில் பெண்கள் இருக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.எதிர்காலத்தில் தேர்தலின் போது பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் எப்போதும் பெண்கள் சமையலறையில் இருப்பதை மட்டும் விரும்பவில்லை எனவும் அங்கு பங்கேற்ற பெண்கள் அதிக அளவில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.இந்நிகழ்வில் தேசிய ஒற்றுமைக்கான அபிவிருத்தி மன்றத்தின்  பிரதிநிதி கே.சுறங்க மற்றும் பிரதேச பெண் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்

Advertisement

Advertisement

Advertisement