அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை எளிதில் வெற்றிக்கொள்ள முடியாது..!

112

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் எளிதில் வெற்றி பெற முடியாதென்று இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் செட்டிஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.

மேலும் 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய மண்ணில் நடந்த 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முதல்முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.

71 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி இந்த வெற்றியை பெற்றிருந்தது.மேலும் அந்த போட்டியில் பந்தை சேதப்படித்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோர்னர் ஆகியோர் நீக்கப்பட்டிருந்தனர்.

எனினும் தண்டணை காலம் நிறைவடைந்து அவர்கள் தற்போது அணியில் மீள இடம்பிடித்துள்ளனர்.

அத்துடன் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டவீரர்கள் சிறப்பாக செயற்படுகின்றனர்.

எனவே அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பெறுவது கடினமானதென்று இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் செட்டிஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.