• Sep 19 2025

நுவரெலியா மாநகரசபையின் ஊடாக 10 குப்பை சேகரிக்கும் வண்டிகள் கையளிப்பு!

shanuja / Sep 17th 2025, 10:38 pm
image

நுவரெலியா மாநகரசபையின் ஊடாக புதிதாக முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட குப்பை முகாமைத்துவத்திற்காகப் பயன்படுத்துவதற்காக 10 குப்பை சேகரிக்கும் வண்டிகள் இன்று (17) துப்புரவு பணியாளர்களிடம் கையளிப்பு செய்யப்பட்டது.


நுவரெலியா நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சிறிய வீதியில் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சென்று சேகரிப்பதற்கு பயன்படுத்தும் புதிய குப்பை தள்ளும் வண்டிகளை நுவரெலியா மாநகரசபையின் முதல்வர் உபாலி வணிகசேகர இணைந்து வழங்கி வைத்தார் .


குறித்த நிழ்வில் நுவரெலியா நகராட்சி அலுவலர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.


குப்பைகள் அதிகரிப்பால் விரைந்து பணியை முடிப்பதில் சிக்கல்கள் காணப்பட்டதாலும் , பழைய குப்பை சேகரிக்கும் வண்டிகள் முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பை சேகரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாலும் நுவரெலியாவில் குப்பையால் சூழல் மாசுப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மாநகரசபையின் ஊடாக 10 குப்பை சேகரிக்கும் வண்டிகள் கையளிப்பு நுவரெலியா மாநகரசபையின் ஊடாக புதிதாக முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட குப்பை முகாமைத்துவத்திற்காகப் பயன்படுத்துவதற்காக 10 குப்பை சேகரிக்கும் வண்டிகள் இன்று (17) துப்புரவு பணியாளர்களிடம் கையளிப்பு செய்யப்பட்டது.நுவரெலியா நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சிறிய வீதியில் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சென்று சேகரிப்பதற்கு பயன்படுத்தும் புதிய குப்பை தள்ளும் வண்டிகளை நுவரெலியா மாநகரசபையின் முதல்வர் உபாலி வணிகசேகர இணைந்து வழங்கி வைத்தார் .குறித்த நிழ்வில் நுவரெலியா நகராட்சி அலுவலர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.குப்பைகள் அதிகரிப்பால் விரைந்து பணியை முடிப்பதில் சிக்கல்கள் காணப்பட்டதாலும் , பழைய குப்பை சேகரிக்கும் வண்டிகள் முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பை சேகரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாலும் நுவரெலியாவில் குப்பையால் சூழல் மாசுப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement