• May 06 2024

பாதுகாக்கப்பட வேண்டிய 1000 ஆண்டுகள் பழமையான திருகோணமலை - திருமங்கலாய் சிவன் ஆலயம்! SamugamMedia

Chithra / Mar 4th 2023, 4:44 pm
image

Advertisement

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆதியம்மன்கேணி கிராம சேவகர் பிரிவில் (217D) லிங்கபுரம் கிராமத்தில் இருந்து சுமார் 8 கிலோமீற்றர் தூரத்தில் திருமங்கலாய் சிவன்கோவில் அமைந்துள்ளது. 

லிங்கபுரம், ஆதியம்மன்கேணி ஆகிய கிராமங்கள் ஒரே கிராமசேவகர் பிரிவின்கீழ் இருந்துவந்த நிலையில் 1990ம் ஆண்டளவில் இரண்டும் தனித்தனியான கிராமசேவகர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. 

ஆதியம்மன்கேணி கிராமசேவகர் பிரிவில் 229 குடும்பங்களைச் சேர்ந்த 602 குடும்ப உறுப்பினர்களும் (ஆண்கள் - 276, பெண்கள் - 326) தற்போது வாழ்ந்து வருகின்றார்கள். 

இவர்களில் 55 பெண் தலைமைதாங்கு குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை வாழ்வாதார தொழிலாகவும் ஒருசிலர் காட்டுக்குச் சென்று தேன் எடுத்தல் விறகு வெட்டுதலை தமது வாழ்வாதார தொழிலாகவும் மேற்கொண்டு வருகின்றார்கள். தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் காட்டு யானையின் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள்.

திருமங்கலாய் எனும் பழம்பெரும் கிராமம் தற்போது வன பாதுகாப்பு திணைக்களத்தினால் உள்வாங்கப்பட்டு அப்பகுதிக்கு மக்கள் செல்ல முடியாத வண்ணம் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பரம்பரயினர் தமது உடமை, வாழ்வாதாரம் உட்பட பழமையான வரலாற்றையும் தொலைத்தவர்களாக இருக்கின்றார்கள் அத்துடன் அப்பகுதியில் காணப்படுகின்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கான வரலாற்று பொக்கிசங்களை கொண்டுள்ள திருமங்கலாய் சிவன் கோவிலையும் பாதுகாக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.

இருப்பினும் சிவராத்திரி தினத்தன்று மாத்திரம் பூஜைகள் செய்வதற்கு பிரதேச மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற வாசகத்திற்கு அமைய கோயிலின் இருப்பை வைத்துக் கொண்டு அப்பகுதியில் குடியிருப்புகள் இருந்ததை மறுதலையாக நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதன்மூலம் அவர்களுடைய நிலத்தை அவர்கள் மீள பெற்றுக் கொண்டு அதன்மூலம் அவர்களது மரபுரிமையையும், வாழ்வியலையும் பாதுகாக்க முடியும்.

ஆலய வரலாறு

*******

சிவபூமி என்று திருமூலநாயனாரால் திருமந்திரத்தில் சிறப்பிக்கப்படும் இவ் இலங்கைத் திருநாட்டில் பல எண்ணிக்கையிலான சிவாலயங்கள் காணப்பட்டதாக நாம் பல்வேறு நூல்கள் வாயிலாக அறிகின்றோம். இவ்வாறு காணப்பட்ட பல சிவாலயங்கள் அழிந்துவிட்டன என்று வரலாறுகள் மற்றும் புராணங்கள் மூலமாக அறியமுடிகின்றது. ஆனால் இதே போல இன்றும் எம் கண்முன்னே பல சிவாலயங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்துவது போல தற்போது அழிவடைந்து எச்சங்களாக மண்ணில் புதையுறும் நிலையிலுள்ள சிவாலயமே புராதன வரலாற்றுப் பெருமை வாய்ந்த திருமங்கலாய் சிவன் கோயில் ஆகும்.

இலங்கையின் கிழக்குப்புறமாக வடக்கே தென்னைமரவாடி தொடக்கம் தெற்கே வெருகலம்பதி வரையிலான நீண்ட நிலப்பரப்பைக் கொண்டுள்ள திருகோணமலை தேசத்தின் மூதூர் (கொட்டியாரபுரப்பற்று) பிரதேசத்தில் திருமங்கலாய் என்னும் தலம் அமைந்துள்ளது. தற்காலத்தில் மக்கள் குடியிருப்பில்லாத இவ்விடம் அடர்ந்த காடுகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. 

இங்கு செல்ல வேண்டுமாயின் மூதூர் நகரத்திலிருந்து கிளிவெட்டி மற்றும் ஆதியம்மன்கேணி கிராமங்களுக்குச் சென்று அங்கிருந்து ஒற்றையடிப்பாதை வழியாகவே திருமங்கலாயை அடைய முடியும். இதே போல கங்குவேலி கிராமத்திற்கூடாகவும் செல்ல முடியும்.

அங்கே செல்லும் எமக்கு அழிவடைந்த நிலையில் கைவிடப்பட்ட ஒரு பழந்தமிழ் சைவக்கிராமத்தை இலகுவாக அடையாளம் காணமுடியும்.

 

பயன்தரு பழமரங்கள் வரிசையாக காணப்படுகின்ற வேலிக்கான மரங்கள் என்பன இங்கே ஒரு மக்கள் கூட்டம் வாழ்ந்துள்ளதை பறைசாற்றுகின்றது. சற்று உள் நுழையும் போது வியப்பை ஏற்படுத்தும் வகையிலான ஒரு ஆலயத்தின் கட்டட சிதைவுகளைக் காணக்கூடியதாகவுள்ளது.

சிதைந்து தூர்ந்த நிலையிலுள்ள பழங்கால கற்களைக் கொண்டமைந்த சைவக்கோயில் ஒன்றின் மூலஸ்தான கட்டடத்தையும், பரந்தளவில் புதையுண்ட நிலையில் காணப்படும் அத்திபாரக் கட்டடத்தையும் ஆங்காங்கே காடுகளில் சிதறிக் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கருங்கல்லாலான தூண்கள் படிக்கட்டுகள், மிகக் குறுகலான ஒடுங்கிய சதுர வடிவிலான கிணறு ஆகியனவும் இங்கே காணப்படுகின்றது.   

இவ்வாறு பழம் பெருமை மிக்க திருமங்கலாய் பிரதேசத்து மக்களின் இடப்பெயர்வினால் இவ்வாலயம் கவனிப்பாரற்றுப் போனது. 

சுமார் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் நிகழ்ந்த மக்கள் வெளியேற்றத்திற்கு அந்நாட்களில் அங்கு பரவி உயிர்களைக் காவு கொண்ட கொள்ளை நோய் தான் காரணம் என்கின்றார்கள் தற்போது அயலூர்களில் வசிக்கும் திருமங்கலாய் மக்கள். அத்தோடு இவ்வூர் மக்கள் இங்கிருந்து கிளிவெட்டி, ஆதியம்மன்கேணி, இலிங்கபுரம், பாரதிபுரம், கங்குவேலி மற்றும் சம்பூர் முதலான இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாகவும் கூறுகின்றனர். 

இதன் பின் இக்கிராமம் காடு மூடிக் கிடக்கலாயிற்று. ஆனாலும் இக்கிராம மக்களிற் சிலர் விவசாய நோக்கம் கருதி மீண்டும் இங்கு சென்று வசித்து வந்த போதிலும் பின்னரான காலப் பகுதியில் இது நிலைத்திருக்கவில்லை எனலாம்


(1).இன்று சிதைவடைந்த மூலஸ்தானக் கட்டடத்தை மாத்திரம் தரைமேற் கட்டடமாகக் கொண்ட இவ்வாலயம் விக்கிரகங்கள் ஏதுமற்றதாகக் காட்சியளிக்கின்றது. ஆனால் இவ்வாலயம் பற்றி சைவப்புலவரும் பண்டிதருமான திரு. இ. வடிவேல் ஐயா அவர்கள் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் கூறும்போது!

“இந்த ஆலயம் பெரும்பாலும் அழிந்த நிலையில் இருக்கின்றது. 

கற்பக்கிரகம் சிதைந்து விட்டது. அர்த்த மண்டபம் சிதைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. மகாமண்டபமும் மற்றும் ஆலய கட்டடங்களும் அத்திவார மட்டத்தில் சிதைந்து மண்ணில் மறைந்து கிடக்கின்றன. அத்திபாரம் பெரும் கற்களினால் அமைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது இங்கு ஒரு பெருங்கோயில் இருந்ததற்குரிய அடையாளங்கள் காணப்படுகின்றன.”(2) என்று கூறியுள்ளார்.

இவ்வாலயம் அழிவடைந்த போது இங்கிருந்த இலிங்கத்தையும் அம்பாளையும் திருவாளர். ஸ்ரீ. தியாகராசா குருக்கள் என்பவர் இங்கிருந்த சைவ மக்களின் துணையுடன் எடுத்துக்கொண்டு வெருகலம்பதியில் சிறு கோயில் கட்டி வைத்திருந்தார். 

பின்னர் இக்கோயிலும் பராமரிப்பற்றுப் போனதால் இத்திருவுருவங்கள் மூதூர் பிள்ளையார் கோயிலில் சில காலங்கள் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அடியவரொருவரால் மட்டக்களப்புக்கு எடுத்துச்செல்லப்பட்டு வழிபடப்பட்டு வருவதாக சிலர் கூறுகின்றனர். எனினும் தற்போதய இடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.

இக்கோயிலின் பிள்ளையார் சிலை இலிங்கபுரத்தில் வைக்கப்பட்டிருந்த போது  சிலவருடங்களுக்கு முன்னர் களவாடப்பட்டது அயல்கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டு இலிங்கபுரம் விநாயகர்கோயிலில் வைக்கப்பட்டது. 


இவ்வழகான சிலை மீண்டும் களவாடப்பட்டு விட்டதாகக் கூறப்படுகின்றது.     

இவ்விடத்திற்குச் சில மைல்கள் தொலைவிலேயே வரலாற்றுப் பெருமை மிக்க திருக்கரைசையம்பதி - அகத்தியதாபனம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சிவனொளிபாத மலையில் உற்பத்தியாகி திருகோணமலையில் கடலோடு சங்கமிக்கின்ற மகாவலி கங்கையின் கிளையாகிய குருக்கள் கங்கைக் கரையோரமாக, நாகரீகத்தில் சிறந்த மக்கள் கூட்டம் வாழ்ந்த இடமாகிய கங்கைவெளிப் பிரதேசமே திருக்கரைசையம்பதி என்று வரலாற்று நூல்கள் எடுத்தியம்புகின்றன. 

திருக்கோணேஸ்வரத்தைப் போலவே திருக்கரைசையம்பதியும் புரதான வரலாற்றுத் தலமாகும். இவ்விரண்டுக்குமே தலபுராணங்கள் உள்ளன. திருக்கோணேஸ்வரத்திற்கு தட்சணகைலாய புராணம் போலவே திருக்கரைசையம்பதிக்கு திருக்கரைசைப்புராணம் பெருமை சேர்க்கின்றது. திருக்கரைசைப்புராணத்தின் படி அந்நாட்களில் கலைகள் பலவற்றை வளர்த்ததோடு, சைவப் பண்பாட்டின் தலைசிறந்த இருப்பிடமாகவும் திருக்கரைசையம்பதி விளங்கியுள்ளமையானது எம்மை வியப்பிலாழ்த்துகின்றது.

இச்சுற்றாடலிலே பல வரலாற்றுப் புகழ்மிக்க சிவாலயங்கள் அமைந்துள்ளமையும் இங்கு நோக்குதற்குரியது. அவைகளாவன! 


திருக்கரைசையம்பதி சிவன்கோவில், 

அகத்திய தாபன சிவன்கோவில், 

கங்குவேலி சிவன்கோவில், 

திருமங்கலாய் சிவன்கோவில், 

பாரதிபுரம் நாகலிங்கேஸ்வரர் சிவன்கோவில், 

மல்லிகைத்தீவு சிவன்கோவில், 

இலிங்கபுரம் சிவன்கோவில் என்பன குறிப்பிடத்தக்கவைகளாகும். மிகக் குறுகிய நிலப்பரப்பில் இத்தனை சிவாலயங்கள் காணப்படுகின்றமையானது இவ்விடத்திலே ஒரு சிறப்புமிக்க சைவ சாம்ராஜ்ஜியம் இருந்துள்ளமையானது புலப்படுகின்றது.

இதிலே 1957ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அல்லை விவசாயக் குடியேற்றத் திட்டத்தின்போது பாரதிபுரம் (LB-4) கிராமம் தோற்றுவிக்கப்பட்டது. இங்கு குடியேறிய ஒருவர் தனது காணியை ஏர் கொண்டு உழவு செய்தபோது பாரதிபுர சிவன்கோயில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.


திருக்கரைசைப்புராணம்

*************

திருக்கரைசைப்புராணத்தின் மூலமாகவே திருமங்கலாய் சிவன்கோவில் வரலாற்றையும் அறியக்கூடியதாகவுள்ளது.

(3). தேசத்து மக்களனைவரும் மகாவலிக் கங்கைக் கரையோரத்திலே ஆடியமாவாசை தினத்தன்று கூடி புராண படனம் செய்யும் திருக்கரைசைப்புராணத்தை எழுதியவர் யாரென்று உறுதியாகத் தெரியாத போதிலும் சிலர் இதை உமாபதி சிவாச்சாரியார் பரம்பரையைச் சேர்ந்த ஒருவரே இயற்றினார் என்பர்.

அறிந்த வரையில் கொட்டியாபுரப்பற்று வன்னிமையாகிய ஸ்ரீ மத் பூபாலபிள்ளை வன்னிமை அவர்களினுடைய முயற்சியினால் இப் புராணம் இத் தீர்த்தக் கரையில் படித்தும், பொருள் சொல்லப்பட்டும் வருகின்றது. அதே போல குருலிங்க சங்கம பக்திகளில் சிறந்தவரும் பரோபகாரசீலருமாகிய கொட்டியாபுரப்பற்று வன்னிமை ஸ்ரீ மத் த. முத்துக்குமாரபிள்ளை அவர்களின் வேண்டுகோளின் படி திருகோணமலைத் தமிழறிஞர் திரு. வே.அகிலேசபிள்ளை அவர்களால் ஓலைச்சுவடியில் இருந்து கி.பி. 1893 இல் அச்சிட்டுக் கொடுக்கப்பட்டது. 

இதற்காக அகிலேசபிள்ளை புலவர் அவர்கள் பல இடங்களிலிருந்தும் தேடி சேகரித்த பத்து பிரதிகளில் ஒன்று சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டிருந்தது என்றும், இதற்கு உரை செய்தவர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த ஸ்ரீ மத். அ.குமாரசுவாமிப்புலவர் என்றும் திரு. வே.அகிலேசபிள்ளை அவர்கள் கி.பி. 1885 ஆம் ஆண்டு எழுதிய வரலாற்றுக் கட்டுரையின் மூலம் அறிய முடிகின்றது 


(4). இதைத் தொடர்ந்து திருக்கரைசைப்புராணம் 1950 களின் பின் பலமுறை பதிப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கபூதரன் - திருமங்கை

**********

திருக்கரைசைப்புராணத்தின் படி அகத்திய மாமுனிவரால் திருக்கரைசையம்பதியில் லிங்கதாபனம் செய்து ஆலயமமைத்து வழிபாடியற்றப்பட்ட மிக நீண்ட காலங்களின் பின்னர், அயோத்தியைச் சேர்ந்த சூரிய வம்சத்தவனான சிங்கபூதரன் என்னும் அரசன் இலங்கைத் தீவை வந்தடைந்தான். 

இக்காலப்பகுதியில் திருமங்கலாயில் இருந்தவாறு இப்பிரதேசத்தை ஆட்சி செய்த எழில்வேந்தன் என்னும் மன்னனின் மகளான திருமங்கை என்பவளை சிங்கபூதரன் மணம்புரிந்து கொண்டு இத்தலத்தை ஆட்சி புரிந்தான். 

இக்காலத்தில் திருமங்கலாயில் சிவன்கோயில் ஒன்றை அமைத்து வழிபாடியற்றியதாகவும், அத்தோடு அகத்தியமாமுனிவரால் அமைக்கப்பட்ட ஆலயத்தையும் புனரமைத்து பூசைகள் சிறப்பாக இடம் பெற ஏற்பாடுகள் செய்ததாகவும் அறியமுடிகின்றது. திருமங்கலாய் சிவன் கோயிலிலுள்ள இறைவனின் பெயர் சுந்தரலிங்கேஸ்வரர் ஆகும் .

(5).இவ்வாறு காலத்திற்குக் காலம் பல்வேறு புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று பெரும் சிறப்புடன் விளங்கிவந்த திருமங்கலாய் சிவன் கோயில் இன்று கவனிப்பாரற்ற நிலையில் காடுமண்டிக் கிடப்பது வேதனையான விடயமாகும். முன்னர் இவ்வாலயம் சிறப்புடனிருந்த போது இங்கிருந்து ஆடி அமாவாசை தினத்திலும், மகரமாதத்திலும் தீர்த்தமாட அம்பாள் சமேதரராய் சிவபெருமான் மகாவலி கங்கைக் கரைக்கு எழுந்தருளுவது வழக்கம் இதே போல அகத்தியதாபன சிவன்கோயிலிலிருந்தும் ஆடியமாவாசை தினத்தில் தீர்த்தமாட செல்வது வழமையான நிகழ்வுகளாகும்.


(6). ஆனால் இவ்விரு ஆலயங்களும் அழிவடைந்த பின்னர் கங்குவேலி சிவன்கோயிலிலிருந்து ஆடியமாவாசை தினத்தில் அம்பாள் சமேதரராய் சிவபெருமான் திருக்கரைசையம்பதியில் தீர்த்தமாடுதல் சமகாலத்து வரலாறு.

திருமங்கலாய் கோயில் மணி

**********

இவ்வாறான வரலாற்றுப் புகழ் மிக்க திருமங்கலாய் சிவன்கோயிலின் பெருமையை பறை சாற்றுகின்ற இக்கோயிலின் ஆலயமணி ஒன்று இன்றளவும் பாதுகாப்பாக பேணப்பட்டு வருகின்றது. அண்ணளவாக நான்கு கிலோகிராம் எடை கொண்ட இக்கோயில் மணியின் வெளிப்புறத்தில் பின்வரும் வாசகங்கள்  மிகத் தெளிவாக வார்க்கப்பட்டுள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. அதாவது!

“திருமங்கலாய் கோயிலுக்கு அவ்வூரிலிருக்கும்                                  

பத்திப் பெட்டி மகன் பத்தன் யுடைய உபையம்”

என்று காணப்படும் எழுத்துக்களின் வரிவடிவங்களை ஆய்வு செய்த வரலாற்றுத்துறை, தகைசார் பேராசிரியர் கலாநிதி சி. பத்மநாதன் அவர்கள் தமிழர் பண்பாட்டு சின்னமான இம் மணியின் காலம் கி.பி. பதினாறாம் அல்லது பதினேழாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கூறுகின்றார்.

(7).ஓல்லாந்தரின் இலங்கை ஆட்சியின் போது திருகோணமலையின் ஒல்லாந்து ஆளுநரான வான்சாண்டன் அவர்களின் திருமங்கலாய்க்கான பயணத்தின் (கி.பி 1786) போது, இங்கே விசாலமான நெல் வயல் நிலங்களும், மக்களும் இருந்ததை பதிவு செய்துள்ளார்.

(8). என்பதும் இங்கு முக்கியமானதாகும்.

நிர்வாகத்திலும் பூசை வழிபாட்டிலும் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட திருமங்கலாயில் இன்றளவும் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் தினத்தில் பத்தினியம்மன் மடையும், இதுதவிர வைரவர் கோயில் பொங்கலும் அயலூர் கிராம மக்களால் இன்றளவும் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருமங்கலாய் சிவன்கோயில் சிறப்புடனிருந்த சென்ற நூற்றாண்டு காலத்தில் பல சாமியார்கள் இங்கு தங்கியிருந்து இறைவழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் அறியக்கூடியதாகவுள்ளது.

இவர்களுள் கிளிவெட்டியைச் சேர்ந்த பசுபதி சாமியார் மற்றும் செல்லத்துரை சாமியார் ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்தியாவைச் சேர்ந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் திருமங்கலாய் வந்து வழிபாடியற்றிய குறிப்புகளும் உண்டு.

(9). இந்து சமயத்தைப் பிரதிபலிக்கும் எத்தனையோ கோயில்கள் நாடுபூராக இருப்பினும் ஒவ்வொரு கோயிலும் ஏதோவொரு வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ, தெய்வீகச் சிறப்பை வெளிக்காட்டும் வகையிலோ அமைந்திருப்பதைக் காணலாம். அந்த வகையில் திருகோணமலை, மூதூர் பிரதேசத்திலுள்ள திருமங்கலாய் சிவன்கோயிலும் மீள வழிபாடியற்றும் வண்ணம் பொலிவு பெறவேண்டுமென்பது சைவஅடியார்களின் எதிர்பார்ப்பாகும். 

வன பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரசன்னம்

**********

திருமங்கலாய் சிவன் ஆலயத்தைச் சூழவுள்ள நிலங்களில் சேனைப்பயிர்ச் செய்கை மற்றும் நெற்பயிர்ச் செய்கையினை மக்கள் மேற்கொண்டு வந்திருந்தார்கள் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைத்ததற்குப் பின்னர் அப்பகுதிகள் வன பாதுகாப்பு திணைக்களத்தின் பராமரிப்பின் கீழும் தொல்லியல் திணைக்களத்தின் கீழும் கொண்டுவரப்பட்டது. 

இதனால் அப்பகுதியில் மக்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் பயிர்ச் செய்கைக்கும், குடியிருப்புக்கும் ஆலய வளாகத்தினுள் கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது இருப்பினும் வருடாவருடம் பல சவால்களுக்கு மத்தியில் பல தரப்பினரிடம் அனுமதிகளைப் பெற்று திருமங்கலாய் சிவன் ஆலயத்தில் சிவராத்திரிதின பூசை நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக தடைப்பட்டிருந்த சிவராத்திரி நிகழ்வு இவ்வருடம் (2023) குறிப்பிட்டளவான பக்த அடியார்களுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றிருந்தது

குறித்த பகுதியில் குடியேறுவதற்கு பலர் முயற்சி செய்து வருகின்றபோதும் குறித்த பகுதி வன பாதுகாப்புத் திணைக்களத்தின்கீழ் இருப்பதால் அவர்களுக்கான அனுமதி வழங்கப்படுவதில்லை எனினும் அப்பகுதியில் பல வருடகாலமாக வசித்ததற்கான பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் உட்பட பல ஆதாரங்கள் அவர்களிடம் இருக்கின்றன.

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வறிக்கை

*********************

திருகோணமலை சிறிமங்கலபுர நினைவுச் சின்னத்தை அகழ்தல்

திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவில் சிறிமங்கலபுர கிராமத்தில் அமைந்துள்ள இடிபாடுகளின் மேடு (வ 8பாகை 18அடி 15 அங்குலம் கி 81பாகை 14அடி 22 அங்குலம்) தொல்பொருளியல் திணைக்களத்தினால் 2017.08.28ம் திகதி தொடக்கம் 2017.10.15 வரையிலான காலத்தினுள் அகழ்வினை மேற்கொண்டு வெளிக் கொணரப்பட்டது. இவ்விடம் பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சினையினை தீர்ப்பதற்காக இடத்தின் தன்மை மற்றும் நினைவுச் சின்னத்தினை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான அகழ்வின் நோக்கமாகும்.

தொல்பொருளியல் திணைக்களத்தினால் 2016 ஆம் ஆண்டில் இவ்விடம் உற்பட பக்கத்து பிரதேசங்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதுடன், பின்பு இங்கு இந்து கோவில் ஒன்று கட்டமைப்பதற்கு பிரேரணையானதுடன், ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினை தீர்ப்பதற்காக அகழ்வு மேற்கொள்ளப்பட்டது. அநுராதபுர காலத்திற்குரிய சிலையின் பாதங்கள் இரண்டும், பாதுகாப்பு கல் பகுதிகள், பாதுகாப்பு கல்லின் ஒது பகுதி இங்கு பிரதான மாக கண்டுவிடிக்கப்பட்டது. கட்டிடம் எவ்வகையிலான நினைவுச் சின்னம் என்று அறிமுகம் செய்வது இலகு அற்றது என்றாலும் செங்கல், கருங்கல், அதன் பகுதிகளாக அநுராதபுரம் மற்றும் பொலன்னறுலை தசாப்தங்களுக்கு உரிய கட்டமைப்பு காரணிகளை கண்டு பிடிக்கலாம். என தொல்லியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேசத்தில் காணப்படுகின்ற வரலாற்று பொக்கிசங்களை ஆவணப்படுத்தும் பாரிய செயற்பாட்டை பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருகின்ற "வைத்தியர் அ.ஸதீஸ்குமார்" அவர்களின் பணி அளப்பரியது.

பாதுகாக்கப்பட வேண்டிய 1000 ஆண்டுகள் பழமையான திருகோணமலை - திருமங்கலாய் சிவன் ஆலயம் SamugamMedia திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆதியம்மன்கேணி கிராம சேவகர் பிரிவில் (217D) லிங்கபுரம் கிராமத்தில் இருந்து சுமார் 8 கிலோமீற்றர் தூரத்தில் திருமங்கலாய் சிவன்கோவில் அமைந்துள்ளது. லிங்கபுரம், ஆதியம்மன்கேணி ஆகிய கிராமங்கள் ஒரே கிராமசேவகர் பிரிவின்கீழ் இருந்துவந்த நிலையில் 1990ம் ஆண்டளவில் இரண்டும் தனித்தனியான கிராமசேவகர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஆதியம்மன்கேணி கிராமசேவகர் பிரிவில் 229 குடும்பங்களைச் சேர்ந்த 602 குடும்ப உறுப்பினர்களும் (ஆண்கள் - 276, பெண்கள் - 326) தற்போது வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் 55 பெண் தலைமைதாங்கு குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை வாழ்வாதார தொழிலாகவும் ஒருசிலர் காட்டுக்குச் சென்று தேன் எடுத்தல் விறகு வெட்டுதலை தமது வாழ்வாதார தொழிலாகவும் மேற்கொண்டு வருகின்றார்கள். தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் காட்டு யானையின் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள்.திருமங்கலாய் எனும் பழம்பெரும் கிராமம் தற்போது வன பாதுகாப்பு திணைக்களத்தினால் உள்வாங்கப்பட்டு அப்பகுதிக்கு மக்கள் செல்ல முடியாத வண்ணம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பரம்பரயினர் தமது உடமை, வாழ்வாதாரம் உட்பட பழமையான வரலாற்றையும் தொலைத்தவர்களாக இருக்கின்றார்கள் அத்துடன் அப்பகுதியில் காணப்படுகின்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கான வரலாற்று பொக்கிசங்களை கொண்டுள்ள திருமங்கலாய் சிவன் கோவிலையும் பாதுகாக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.இருப்பினும் சிவராத்திரி தினத்தன்று மாத்திரம் பூஜைகள் செய்வதற்கு பிரதேச மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற வாசகத்திற்கு அமைய கோயிலின் இருப்பை வைத்துக் கொண்டு அப்பகுதியில் குடியிருப்புகள் இருந்ததை மறுதலையாக நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதன்மூலம் அவர்களுடைய நிலத்தை அவர்கள் மீள பெற்றுக் கொண்டு அதன்மூலம் அவர்களது மரபுரிமையையும், வாழ்வியலையும் பாதுகாக்க முடியும்.ஆலய வரலாறு*******சிவபூமி என்று திருமூலநாயனாரால் திருமந்திரத்தில் சிறப்பிக்கப்படும் இவ் இலங்கைத் திருநாட்டில் பல எண்ணிக்கையிலான சிவாலயங்கள் காணப்பட்டதாக நாம் பல்வேறு நூல்கள் வாயிலாக அறிகின்றோம். இவ்வாறு காணப்பட்ட பல சிவாலயங்கள் அழிந்துவிட்டன என்று வரலாறுகள் மற்றும் புராணங்கள் மூலமாக அறியமுடிகின்றது. ஆனால் இதே போல இன்றும் எம் கண்முன்னே பல சிவாலயங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்துவது போல தற்போது அழிவடைந்து எச்சங்களாக மண்ணில் புதையுறும் நிலையிலுள்ள சிவாலயமே புராதன வரலாற்றுப் பெருமை வாய்ந்த திருமங்கலாய் சிவன் கோயில் ஆகும்.இலங்கையின் கிழக்குப்புறமாக வடக்கே தென்னைமரவாடி தொடக்கம் தெற்கே வெருகலம்பதி வரையிலான நீண்ட நிலப்பரப்பைக் கொண்டுள்ள திருகோணமலை தேசத்தின் மூதூர் (கொட்டியாரபுரப்பற்று) பிரதேசத்தில் திருமங்கலாய் என்னும் தலம் அமைந்துள்ளது. தற்காலத்தில் மக்கள் குடியிருப்பில்லாத இவ்விடம் அடர்ந்த காடுகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இங்கு செல்ல வேண்டுமாயின் மூதூர் நகரத்திலிருந்து கிளிவெட்டி மற்றும் ஆதியம்மன்கேணி கிராமங்களுக்குச் சென்று அங்கிருந்து ஒற்றையடிப்பாதை வழியாகவே திருமங்கலாயை அடைய முடியும். இதே போல கங்குவேலி கிராமத்திற்கூடாகவும் செல்ல முடியும்.அங்கே செல்லும் எமக்கு அழிவடைந்த நிலையில் கைவிடப்பட்ட ஒரு பழந்தமிழ் சைவக்கிராமத்தை இலகுவாக அடையாளம் காணமுடியும். பயன்தரு பழமரங்கள் வரிசையாக காணப்படுகின்ற வேலிக்கான மரங்கள் என்பன இங்கே ஒரு மக்கள் கூட்டம் வாழ்ந்துள்ளதை பறைசாற்றுகின்றது. சற்று உள் நுழையும் போது வியப்பை ஏற்படுத்தும் வகையிலான ஒரு ஆலயத்தின் கட்டட சிதைவுகளைக் காணக்கூடியதாகவுள்ளது.சிதைந்து தூர்ந்த நிலையிலுள்ள பழங்கால கற்களைக் கொண்டமைந்த சைவக்கோயில் ஒன்றின் மூலஸ்தான கட்டடத்தையும், பரந்தளவில் புதையுண்ட நிலையில் காணப்படும் அத்திபாரக் கட்டடத்தையும் ஆங்காங்கே காடுகளில் சிதறிக் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கருங்கல்லாலான தூண்கள் படிக்கட்டுகள், மிகக் குறுகலான ஒடுங்கிய சதுர வடிவிலான கிணறு ஆகியனவும் இங்கே காணப்படுகின்றது.   இவ்வாறு பழம் பெருமை மிக்க திருமங்கலாய் பிரதேசத்து மக்களின் இடப்பெயர்வினால் இவ்வாலயம் கவனிப்பாரற்றுப் போனது. சுமார் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் நிகழ்ந்த மக்கள் வெளியேற்றத்திற்கு அந்நாட்களில் அங்கு பரவி உயிர்களைக் காவு கொண்ட கொள்ளை நோய் தான் காரணம் என்கின்றார்கள் தற்போது அயலூர்களில் வசிக்கும் திருமங்கலாய் மக்கள். அத்தோடு இவ்வூர் மக்கள் இங்கிருந்து கிளிவெட்டி, ஆதியம்மன்கேணி, இலிங்கபுரம், பாரதிபுரம், கங்குவேலி மற்றும் சம்பூர் முதலான இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாகவும் கூறுகின்றனர். இதன் பின் இக்கிராமம் காடு மூடிக் கிடக்கலாயிற்று. ஆனாலும் இக்கிராம மக்களிற் சிலர் விவசாய நோக்கம் கருதி மீண்டும் இங்கு சென்று வசித்து வந்த போதிலும் பின்னரான காலப் பகுதியில் இது நிலைத்திருக்கவில்லை எனலாம்(1).இன்று சிதைவடைந்த மூலஸ்தானக் கட்டடத்தை மாத்திரம் தரைமேற் கட்டடமாகக் கொண்ட இவ்வாலயம் விக்கிரகங்கள் ஏதுமற்றதாகக் காட்சியளிக்கின்றது. ஆனால் இவ்வாலயம் பற்றி சைவப்புலவரும் பண்டிதருமான திரு. இ. வடிவேல் ஐயா அவர்கள் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் கூறும்போது“இந்த ஆலயம் பெரும்பாலும் அழிந்த நிலையில் இருக்கின்றது. கற்பக்கிரகம் சிதைந்து விட்டது. அர்த்த மண்டபம் சிதைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. மகாமண்டபமும் மற்றும் ஆலய கட்டடங்களும் அத்திவார மட்டத்தில் சிதைந்து மண்ணில் மறைந்து கிடக்கின்றன. அத்திபாரம் பெரும் கற்களினால் அமைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது இங்கு ஒரு பெருங்கோயில் இருந்ததற்குரிய அடையாளங்கள் காணப்படுகின்றன.”(2) என்று கூறியுள்ளார்.இவ்வாலயம் அழிவடைந்த போது இங்கிருந்த இலிங்கத்தையும் அம்பாளையும் திருவாளர். ஸ்ரீ. தியாகராசா குருக்கள் என்பவர் இங்கிருந்த சைவ மக்களின் துணையுடன் எடுத்துக்கொண்டு வெருகலம்பதியில் சிறு கோயில் கட்டி வைத்திருந்தார். பின்னர் இக்கோயிலும் பராமரிப்பற்றுப் போனதால் இத்திருவுருவங்கள் மூதூர் பிள்ளையார் கோயிலில் சில காலங்கள் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அடியவரொருவரால் மட்டக்களப்புக்கு எடுத்துச்செல்லப்பட்டு வழிபடப்பட்டு வருவதாக சிலர் கூறுகின்றனர். எனினும் தற்போதய இடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.இக்கோயிலின் பிள்ளையார் சிலை இலிங்கபுரத்தில் வைக்கப்பட்டிருந்த போது  சிலவருடங்களுக்கு முன்னர் களவாடப்பட்டது அயல்கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டு இலிங்கபுரம் விநாயகர்கோயிலில் வைக்கப்பட்டது. இவ்வழகான சிலை மீண்டும் களவாடப்பட்டு விட்டதாகக் கூறப்படுகின்றது.     இவ்விடத்திற்குச் சில மைல்கள் தொலைவிலேயே வரலாற்றுப் பெருமை மிக்க திருக்கரைசையம்பதி - அகத்தியதாபனம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிவனொளிபாத மலையில் உற்பத்தியாகி திருகோணமலையில் கடலோடு சங்கமிக்கின்ற மகாவலி கங்கையின் கிளையாகிய குருக்கள் கங்கைக் கரையோரமாக, நாகரீகத்தில் சிறந்த மக்கள் கூட்டம் வாழ்ந்த இடமாகிய கங்கைவெளிப் பிரதேசமே திருக்கரைசையம்பதி என்று வரலாற்று நூல்கள் எடுத்தியம்புகின்றன. திருக்கோணேஸ்வரத்தைப் போலவே திருக்கரைசையம்பதியும் புரதான வரலாற்றுத் தலமாகும். இவ்விரண்டுக்குமே தலபுராணங்கள் உள்ளன. திருக்கோணேஸ்வரத்திற்கு தட்சணகைலாய புராணம் போலவே திருக்கரைசையம்பதிக்கு திருக்கரைசைப்புராணம் பெருமை சேர்க்கின்றது. திருக்கரைசைப்புராணத்தின் படி அந்நாட்களில் கலைகள் பலவற்றை வளர்த்ததோடு, சைவப் பண்பாட்டின் தலைசிறந்த இருப்பிடமாகவும் திருக்கரைசையம்பதி விளங்கியுள்ளமையானது எம்மை வியப்பிலாழ்த்துகின்றது.இச்சுற்றாடலிலே பல வரலாற்றுப் புகழ்மிக்க சிவாலயங்கள் அமைந்துள்ளமையும் இங்கு நோக்குதற்குரியது. அவைகளாவன திருக்கரைசையம்பதி சிவன்கோவில், அகத்திய தாபன சிவன்கோவில், கங்குவேலி சிவன்கோவில், திருமங்கலாய் சிவன்கோவில், பாரதிபுரம் நாகலிங்கேஸ்வரர் சிவன்கோவில், மல்லிகைத்தீவு சிவன்கோவில், இலிங்கபுரம் சிவன்கோவில் என்பன குறிப்பிடத்தக்கவைகளாகும். மிகக் குறுகிய நிலப்பரப்பில் இத்தனை சிவாலயங்கள் காணப்படுகின்றமையானது இவ்விடத்திலே ஒரு சிறப்புமிக்க சைவ சாம்ராஜ்ஜியம் இருந்துள்ளமையானது புலப்படுகின்றது.இதிலே 1957ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அல்லை விவசாயக் குடியேற்றத் திட்டத்தின்போது பாரதிபுரம் (LB-4) கிராமம் தோற்றுவிக்கப்பட்டது. இங்கு குடியேறிய ஒருவர் தனது காணியை ஏர் கொண்டு உழவு செய்தபோது பாரதிபுர சிவன்கோயில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.திருக்கரைசைப்புராணம்*************திருக்கரைசைப்புராணத்தின் மூலமாகவே திருமங்கலாய் சிவன்கோவில் வரலாற்றையும் அறியக்கூடியதாகவுள்ளது.(3). தேசத்து மக்களனைவரும் மகாவலிக் கங்கைக் கரையோரத்திலே ஆடியமாவாசை தினத்தன்று கூடி புராண படனம் செய்யும் திருக்கரைசைப்புராணத்தை எழுதியவர் யாரென்று உறுதியாகத் தெரியாத போதிலும் சிலர் இதை உமாபதி சிவாச்சாரியார் பரம்பரையைச் சேர்ந்த ஒருவரே இயற்றினார் என்பர்.அறிந்த வரையில் கொட்டியாபுரப்பற்று வன்னிமையாகிய ஸ்ரீ மத் பூபாலபிள்ளை வன்னிமை அவர்களினுடைய முயற்சியினால் இப் புராணம் இத் தீர்த்தக் கரையில் படித்தும், பொருள் சொல்லப்பட்டும் வருகின்றது. அதே போல குருலிங்க சங்கம பக்திகளில் சிறந்தவரும் பரோபகாரசீலருமாகிய கொட்டியாபுரப்பற்று வன்னிமை ஸ்ரீ மத் த. முத்துக்குமாரபிள்ளை அவர்களின் வேண்டுகோளின் படி திருகோணமலைத் தமிழறிஞர் திரு. வே.அகிலேசபிள்ளை அவர்களால் ஓலைச்சுவடியில் இருந்து கி.பி. 1893 இல் அச்சிட்டுக் கொடுக்கப்பட்டது. இதற்காக அகிலேசபிள்ளை புலவர் அவர்கள் பல இடங்களிலிருந்தும் தேடி சேகரித்த பத்து பிரதிகளில் ஒன்று சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டிருந்தது என்றும், இதற்கு உரை செய்தவர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த ஸ்ரீ மத். அ.குமாரசுவாமிப்புலவர் என்றும் திரு. வே.அகிலேசபிள்ளை அவர்கள் கி.பி. 1885 ஆம் ஆண்டு எழுதிய வரலாற்றுக் கட்டுரையின் மூலம் அறிய முடிகின்றது (4). இதைத் தொடர்ந்து திருக்கரைசைப்புராணம் 1950 களின் பின் பலமுறை பதிப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.சிங்கபூதரன் - திருமங்கை**********திருக்கரைசைப்புராணத்தின் படி அகத்திய மாமுனிவரால் திருக்கரைசையம்பதியில் லிங்கதாபனம் செய்து ஆலயமமைத்து வழிபாடியற்றப்பட்ட மிக நீண்ட காலங்களின் பின்னர், அயோத்தியைச் சேர்ந்த சூரிய வம்சத்தவனான சிங்கபூதரன் என்னும் அரசன் இலங்கைத் தீவை வந்தடைந்தான். இக்காலப்பகுதியில் திருமங்கலாயில் இருந்தவாறு இப்பிரதேசத்தை ஆட்சி செய்த எழில்வேந்தன் என்னும் மன்னனின் மகளான திருமங்கை என்பவளை சிங்கபூதரன் மணம்புரிந்து கொண்டு இத்தலத்தை ஆட்சி புரிந்தான். இக்காலத்தில் திருமங்கலாயில் சிவன்கோயில் ஒன்றை அமைத்து வழிபாடியற்றியதாகவும், அத்தோடு அகத்தியமாமுனிவரால் அமைக்கப்பட்ட ஆலயத்தையும் புனரமைத்து பூசைகள் சிறப்பாக இடம் பெற ஏற்பாடுகள் செய்ததாகவும் அறியமுடிகின்றது. திருமங்கலாய் சிவன் கோயிலிலுள்ள இறைவனின் பெயர் சுந்தரலிங்கேஸ்வரர் ஆகும் .(5).இவ்வாறு காலத்திற்குக் காலம் பல்வேறு புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று பெரும் சிறப்புடன் விளங்கிவந்த திருமங்கலாய் சிவன் கோயில் இன்று கவனிப்பாரற்ற நிலையில் காடுமண்டிக் கிடப்பது வேதனையான விடயமாகும். முன்னர் இவ்வாலயம் சிறப்புடனிருந்த போது இங்கிருந்து ஆடி அமாவாசை தினத்திலும், மகரமாதத்திலும் தீர்த்தமாட அம்பாள் சமேதரராய் சிவபெருமான் மகாவலி கங்கைக் கரைக்கு எழுந்தருளுவது வழக்கம் இதே போல அகத்தியதாபன சிவன்கோயிலிலிருந்தும் ஆடியமாவாசை தினத்தில் தீர்த்தமாட செல்வது வழமையான நிகழ்வுகளாகும்.(6). ஆனால் இவ்விரு ஆலயங்களும் அழிவடைந்த பின்னர் கங்குவேலி சிவன்கோயிலிலிருந்து ஆடியமாவாசை தினத்தில் அம்பாள் சமேதரராய் சிவபெருமான் திருக்கரைசையம்பதியில் தீர்த்தமாடுதல் சமகாலத்து வரலாறு.திருமங்கலாய் கோயில் மணி**********இவ்வாறான வரலாற்றுப் புகழ் மிக்க திருமங்கலாய் சிவன்கோயிலின் பெருமையை பறை சாற்றுகின்ற இக்கோயிலின் ஆலயமணி ஒன்று இன்றளவும் பாதுகாப்பாக பேணப்பட்டு வருகின்றது. அண்ணளவாக நான்கு கிலோகிராம் எடை கொண்ட இக்கோயில் மணியின் வெளிப்புறத்தில் பின்வரும் வாசகங்கள்  மிகத் தெளிவாக வார்க்கப்பட்டுள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. அதாவது“திருமங்கலாய் கோயிலுக்கு அவ்வூரிலிருக்கும்                                  பத்திப் பெட்டி மகன் பத்தன் யுடைய உபையம்”என்று காணப்படும் எழுத்துக்களின் வரிவடிவங்களை ஆய்வு செய்த வரலாற்றுத்துறை, தகைசார் பேராசிரியர் கலாநிதி சி. பத்மநாதன் அவர்கள் தமிழர் பண்பாட்டு சின்னமான இம் மணியின் காலம் கி.பி. பதினாறாம் அல்லது பதினேழாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கூறுகின்றார்.(7).ஓல்லாந்தரின் இலங்கை ஆட்சியின் போது திருகோணமலையின் ஒல்லாந்து ஆளுநரான வான்சாண்டன் அவர்களின் திருமங்கலாய்க்கான பயணத்தின் (கி.பி 1786) போது, இங்கே விசாலமான நெல் வயல் நிலங்களும், மக்களும் இருந்ததை பதிவு செய்துள்ளார்.(8). என்பதும் இங்கு முக்கியமானதாகும்.நிர்வாகத்திலும் பூசை வழிபாட்டிலும் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட திருமங்கலாயில் இன்றளவும் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் தினத்தில் பத்தினியம்மன் மடையும், இதுதவிர வைரவர் கோயில் பொங்கலும் அயலூர் கிராம மக்களால் இன்றளவும் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.திருமங்கலாய் சிவன்கோயில் சிறப்புடனிருந்த சென்ற நூற்றாண்டு காலத்தில் பல சாமியார்கள் இங்கு தங்கியிருந்து இறைவழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் அறியக்கூடியதாகவுள்ளது.இவர்களுள் கிளிவெட்டியைச் சேர்ந்த பசுபதி சாமியார் மற்றும் செல்லத்துரை சாமியார் ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்தியாவைச் சேர்ந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் திருமங்கலாய் வந்து வழிபாடியற்றிய குறிப்புகளும் உண்டு.(9). இந்து சமயத்தைப் பிரதிபலிக்கும் எத்தனையோ கோயில்கள் நாடுபூராக இருப்பினும் ஒவ்வொரு கோயிலும் ஏதோவொரு வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ, தெய்வீகச் சிறப்பை வெளிக்காட்டும் வகையிலோ அமைந்திருப்பதைக் காணலாம். அந்த வகையில் திருகோணமலை, மூதூர் பிரதேசத்திலுள்ள திருமங்கலாய் சிவன்கோயிலும் மீள வழிபாடியற்றும் வண்ணம் பொலிவு பெறவேண்டுமென்பது சைவஅடியார்களின் எதிர்பார்ப்பாகும். வன பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரசன்னம்**********திருமங்கலாய் சிவன் ஆலயத்தைச் சூழவுள்ள நிலங்களில் சேனைப்பயிர்ச் செய்கை மற்றும் நெற்பயிர்ச் செய்கையினை மக்கள் மேற்கொண்டு வந்திருந்தார்கள் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைத்ததற்குப் பின்னர் அப்பகுதிகள் வன பாதுகாப்பு திணைக்களத்தின் பராமரிப்பின் கீழும் தொல்லியல் திணைக்களத்தின் கீழும் கொண்டுவரப்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் பயிர்ச் செய்கைக்கும், குடியிருப்புக்கும் ஆலய வளாகத்தினுள் கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது இருப்பினும் வருடாவருடம் பல சவால்களுக்கு மத்தியில் பல தரப்பினரிடம் அனுமதிகளைப் பெற்று திருமங்கலாய் சிவன் ஆலயத்தில் சிவராத்திரிதின பூசை நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக தடைப்பட்டிருந்த சிவராத்திரி நிகழ்வு இவ்வருடம் (2023) குறிப்பிட்டளவான பக்த அடியார்களுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றிருந்ததுகுறித்த பகுதியில் குடியேறுவதற்கு பலர் முயற்சி செய்து வருகின்றபோதும் குறித்த பகுதி வன பாதுகாப்புத் திணைக்களத்தின்கீழ் இருப்பதால் அவர்களுக்கான அனுமதி வழங்கப்படுவதில்லை எனினும் அப்பகுதியில் பல வருடகாலமாக வசித்ததற்கான பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் உட்பட பல ஆதாரங்கள் அவர்களிடம் இருக்கின்றன.தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வறிக்கை*********************திருகோணமலை சிறிமங்கலபுர நினைவுச் சின்னத்தை அகழ்தல்திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவில் சிறிமங்கலபுர கிராமத்தில் அமைந்துள்ள இடிபாடுகளின் மேடு (வ 8பாகை 18அடி 15 அங்குலம் கி 81பாகை 14அடி 22 அங்குலம்) தொல்பொருளியல் திணைக்களத்தினால் 2017.08.28ம் திகதி தொடக்கம் 2017.10.15 வரையிலான காலத்தினுள் அகழ்வினை மேற்கொண்டு வெளிக் கொணரப்பட்டது. இவ்விடம் பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சினையினை தீர்ப்பதற்காக இடத்தின் தன்மை மற்றும் நினைவுச் சின்னத்தினை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான அகழ்வின் நோக்கமாகும்.தொல்பொருளியல் திணைக்களத்தினால் 2016 ஆம் ஆண்டில் இவ்விடம் உற்பட பக்கத்து பிரதேசங்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதுடன், பின்பு இங்கு இந்து கோவில் ஒன்று கட்டமைப்பதற்கு பிரேரணையானதுடன், ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினை தீர்ப்பதற்காக அகழ்வு மேற்கொள்ளப்பட்டது. அநுராதபுர காலத்திற்குரிய சிலையின் பாதங்கள் இரண்டும், பாதுகாப்பு கல் பகுதிகள், பாதுகாப்பு கல்லின் ஒது பகுதி இங்கு பிரதான மாக கண்டுவிடிக்கப்பட்டது. கட்டிடம் எவ்வகையிலான நினைவுச் சின்னம் என்று அறிமுகம் செய்வது இலகு அற்றது என்றாலும் செங்கல், கருங்கல், அதன் பகுதிகளாக அநுராதபுரம் மற்றும் பொலன்னறுலை தசாப்தங்களுக்கு உரிய கட்டமைப்பு காரணிகளை கண்டு பிடிக்கலாம். என தொல்லியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மூதூர் பிரதேசத்தில் காணப்படுகின்ற வரலாற்று பொக்கிசங்களை ஆவணப்படுத்தும் பாரிய செயற்பாட்டை பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருகின்ற "வைத்தியர் அ.ஸதீஸ்குமார்" அவர்களின் பணி அளப்பரியது.

Advertisement

Advertisement

Advertisement