கல்கிஸ்ஸை, கடலில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் கடல் அலையில் அள்ளுண்டு சென்ற நிலையில், அவர்கள் மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், கடல் நீரோட்டத்தில் சிக்கிய சிறுவர்களை பாதுகாப்பாக மீட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு பின்னர் முதலுதவியும் அளிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும், வெல்லம்பிட்டிய, கட்டுக்குருந்த மற்றும் ஹோகந்தர ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 வயதுடையவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பலத்த கடல் அலைகள் காணப்படும் போது பொதுமக்கள் கடலில் குளிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட 3 சிறுவர்கள்; கடலில் குளிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரிக்கை கல்கிஸ்ஸை, கடலில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் கடல் அலையில் அள்ளுண்டு சென்ற நிலையில், அவர்கள் மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், கடல் நீரோட்டத்தில் சிக்கிய சிறுவர்களை பாதுகாப்பாக மீட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு பின்னர் முதலுதவியும் அளிக்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும், வெல்லம்பிட்டிய, கட்டுக்குருந்த மற்றும் ஹோகந்தர ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 வயதுடையவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பலத்த கடல் அலைகள் காணப்படும் போது பொதுமக்கள் கடலில் குளிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.