• May 06 2024

மலையக பாடசாலை மீது குடைசாய்ந்தது பாரிய மரம் ! இருவர் பலி!!

crownson / Dec 9th 2022, 7:03 am
image

Advertisement

பதுளை உட்பட்ட மலையகத்தில் சில பகுதிகளில் வீசிய மினி சூறாவளியினால் ஆங்கங்கே பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளன.

இதனால் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது வாகனங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

இதனால் வாகனங்கள் சேதமடைந்து உள்ளது.

கடும் காற்றினால் நுவரெலியா மாவட்டம் வலப்பனை, உடப்புஸலாவை, ருப்பஹா, கந்தப்பளை ஆகிய பல இடங்களில் பாரிய மரங்கள் முறிவு ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்தில் கடந்த 7 ஆம் திதி இரவு முதல் பலத்த காற்று வீசுகின்ற அதே வேலை கடுமையான குளிரும் ஏற்பட்டுள்ளது.

ராகலை ப்ரூட்சைட் பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரை வண்டி ஒன்றின் மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இரத்த வெள்ளத்துடன் உயிரிழந்துள்ளதாக ராகலை போலீசார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதேபோன்று உடப்புஸலாவை பகுதியில் வீடு ஒன்றின் மீது பாரிய மர கிளை விழுந்து நேற்று காலை 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் தொடர்ந்து மின்கம்பங்களும் வீதியில் சரிவதை காணக் கூடியதாக உள்ளது.

இதற்காக போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து குறித்த மின்கம்பங்கள் மற்றும் மர கிளைகளை பாதைகளில் இருந்து அகற்றும் வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாரிய மரங்கள் காணப்படும் இடங்களில் வசிப்போர் அவதாத்துடன் இருக்குமாறு நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களுக்கு எச்சரித்துள்ளது.

மேலும் ராகலை உயர்நிலை பாடசாலை கட்டிடம் ஒன்றின் மீது பாரிய மரம் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிடத்தில் பயிலும் உயர்தர மாணவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

மலையக பாடசாலை மீது குடைசாய்ந்தது பாரிய மரம் இருவர் பலி பதுளை உட்பட்ட மலையகத்தில் சில பகுதிகளில் வீசிய மினி சூறாவளியினால் ஆங்கங்கே பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது வாகனங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் வாகனங்கள் சேதமடைந்து உள்ளது. கடும் காற்றினால் நுவரெலியா மாவட்டம் வலப்பனை, உடப்புஸலாவை, ருப்பஹா, கந்தப்பளை ஆகிய பல இடங்களில் பாரிய மரங்கள் முறிவு ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்தில் கடந்த 7 ஆம் திகதி இரவு முதல் பலத்த காற்று வீசுகின்ற அதே வேலை கடுமையான குளிரும் ஏற்பட்டுள்ளது. ராகலை ப்ரூட்சைட் பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரை வண்டி ஒன்றின் மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இரத்த வெள்ளத்துடன் உயிரிழந்துள்ளதாக ராகலை போலீசார் தெரிவித்தனர்.முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதேபோன்று உடப்புஸலாவை பகுதியில் வீடு ஒன்றின் மீது பாரிய மர கிளை விழுந்து நேற்று காலை 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் தொடர்ந்து மின்கம்பங்களும் வீதியில் சரிவதை காணக் கூடியதாக உள்ளது. இதற்காக போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து குறித்த மின்கம்பங்கள் மற்றும் மர கிளைகளை பாதைகளில் இருந்து அகற்றும் வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாரிய மரங்கள் காணப்படும் இடங்களில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களுக்கு எச்சரித்துள்ளது.மேலும் ராகலை உயர்நிலை பாடசாலை கட்டிடம் ஒன்றின் மீது பாரிய மரம் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்தில் பயிலும் உயர்தர மாணவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement