• May 05 2024

நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி...! குவியும் வாழ்த்து..! samugammedia

Chithra / Nov 18th 2023, 7:39 am
image

Advertisement



நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் பதுளை விஹாரமஹாதேவி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாணவி W.M.துலினி சாந்தினி என்ற மாணவி 198 புள்ளிகளைப் பெற்று நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதுளை ஸ்பிரிங்வேலி வீதியை வசிப்பிடமாகக் கொண்ட துலினி சாந்தினியின், தாயார்   பொறியியலாளர் மற்றும் தந்தை வர்த்தகராவார்.

“இந்த வெற்றியில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், 

நன்றாகப் படித்து 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்று நினைத்தேன் என்று துலினி கூறினார்.

இதேவேளை இவ் மாணவிக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை  அலுபோமுல்ல, மஹாபெல்லான ஆரம்ப பாடசாலை மாணவன் ஹெவிந்து ஹசரேல், அனுராதபுரம், புனித ஜோசப் கல்லூரி மாணவன் நவங்க ஹன்சராஜ் பொன்சேகா, கம்பஹா, கோதமி வித்தியாலய மாணவன் ஹிருஷ கேஷான் விஜேசிங்க,    கம்பஹா, சுமேதா கல்லூரி மாணவன் ஷெனுல் அக்மீமன ஆகியோரும்  2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்  198 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி. குவியும் வாழ்த்து. samugammedia நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் பதுளை விஹாரமஹாதேவி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.மாணவி W.M.துலினி சாந்தினி என்ற மாணவி 198 புள்ளிகளைப் பெற்று நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.பதுளை ஸ்பிரிங்வேலி வீதியை வசிப்பிடமாகக் கொண்ட துலினி சாந்தினியின், தாயார்   பொறியியலாளர் மற்றும் தந்தை வர்த்தகராவார்.“இந்த வெற்றியில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நன்றாகப் படித்து 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்று நினைத்தேன் என்று துலினி கூறினார்.இதேவேளை இவ் மாணவிக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை  அலுபோமுல்ல, மஹாபெல்லான ஆரம்ப பாடசாலை மாணவன் ஹெவிந்து ஹசரேல், அனுராதபுரம், புனித ஜோசப் கல்லூரி மாணவன் நவங்க ஹன்சராஜ் பொன்சேகா, கம்பஹா, கோதமி வித்தியாலய மாணவன் ஹிருஷ கேஷான் விஜேசிங்க,    கம்பஹா, சுமேதா கல்லூரி மாணவன் ஷெனுல் அக்மீமன ஆகியோரும்  2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்  198 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement