• May 18 2024

வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை..! நீதி அமைச்சர் அறிவிப்பு samugammedia

Chithra / Nov 24th 2023, 10:33 am
image

Advertisement

 

வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் சேவையாற்றக்கூடிய 6000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  மொழி பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய டலஸ் அழகப்பெரும எம்.பி அது தொடர்பில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கடந்த 30 வருட யுத்த கால சூழ்நிலையின் போது, வடக்கில் எந்தவொர இளைஞர் யுவதிகளுக்கும் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. 

ஆனால் நாம் 2016 ஆம் ஆண்டு புதியதொரு நடைமுறையைக் கொண்டு வந்திருந்தோம்.

இதேவேளை  வடக்கு கிழக்கில் தமிழை தமது தாய் மொழியாகக் கொண்ட மக்கள் பொலிஸ் நிலையங்களில் தமது தாய் மொழியில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியாமல் பெரும் கஷ்டப்படுகின்றனர்.

தமது தாய் மொழியில் வாக்குமூலங்களை பதிவு செய்து கொள்வதற்கும் முடியாத நிலையே அங்கு காணப்படுகிறது. 

இவ்வாறான விடயங்கள் சில வேளைகளில் இனப் பிரச்சினைக்கான காரணமாகவும் அமைந்து விடுகின்றன. இது அநீதியான ஒரு விடயமாகும்.

நாட்டில் 85,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் உள்ள நிலையில் அவர்களின் ஒரு வீதமாவது இவ்வாறு தமிழ் மொழியில் செயற்படக்கூடிய உத்தியோகத்தர்கள் கிடையாது. 

அந்த வகையில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் துறையில்  நியமித்துக் கொள்வது தொடர்பான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது அவசியம் என்றார்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை. நீதி அமைச்சர் அறிவிப்பு samugammedia  வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.அவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் சேவையாற்றக்கூடிய 6000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  மொழி பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய டலஸ் அழகப்பெரும எம்.பி அது தொடர்பில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் கடந்த 30 வருட யுத்த கால சூழ்நிலையின் போது, வடக்கில் எந்தவொர இளைஞர் யுவதிகளுக்கும் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. ஆனால் நாம் 2016 ஆம் ஆண்டு புதியதொரு நடைமுறையைக் கொண்டு வந்திருந்தோம்.இதேவேளை  வடக்கு கிழக்கில் தமிழை தமது தாய் மொழியாகக் கொண்ட மக்கள் பொலிஸ் நிலையங்களில் தமது தாய் மொழியில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியாமல் பெரும் கஷ்டப்படுகின்றனர்.தமது தாய் மொழியில் வாக்குமூலங்களை பதிவு செய்து கொள்வதற்கும் முடியாத நிலையே அங்கு காணப்படுகிறது. இவ்வாறான விடயங்கள் சில வேளைகளில் இனப் பிரச்சினைக்கான காரணமாகவும் அமைந்து விடுகின்றன. இது அநீதியான ஒரு விடயமாகும்.நாட்டில் 85,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் உள்ள நிலையில் அவர்களின் ஒரு வீதமாவது இவ்வாறு தமிழ் மொழியில் செயற்படக்கூடிய உத்தியோகத்தர்கள் கிடையாது. அந்த வகையில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் துறையில்  நியமித்துக் கொள்வது தொடர்பான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது அவசியம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement