• Dec 18 2025

ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் தொடர் - நேபாளத்தை வீழ்த்திய இலங்கை!

shanuja / Dec 13th 2025, 9:09 pm
image

டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 


போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 


இதன்படி முதலில் துடுப்பாடிய 28.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 


இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் செத்மிக செனவிரட்ன 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 


இந்நிலையில் 83 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை இளையோர் அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றிபெற்றது. 


போட்டியின் சிறப்பாட்டக்காரராக செத்மிக செனவிரட்ன தெரிவானார்.  இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை இளையோர் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.


ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் தொடர் - நேபாளத்தை வீழ்த்திய இலங்கை டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய 28.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் செத்மிக செனவிரட்ன 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்நிலையில் 83 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை இளையோர் அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றிபெற்றது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக செத்மிக செனவிரட்ன தெரிவானார்.  இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை இளையோர் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement