• May 18 2024

இலங்கையில் இனப்படுகொலைகள் குறித்து கனடாவின் பிரகடனம்- ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Jun 9th 2023, 5:05 pm
image

Advertisement

இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்ற கனடாவின் பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் கடற்படை தளபதியின் தலைமையில் நடைபெற்ற தேசிய பார்வை தொடர்பான கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில்  தெரிவித்த அவர்,   கனடாவின் அரசியல்நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும்  தான் தனிநபர் பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும், ஆதாரங்கள் அற்ற யுத்தகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கனடா விதித்துள்ள பயணத்தடைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்தினருக்கு கடும் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சவாலுக்கு உட்படுத்தாமல் தொடர அனுமதித்தால் அது தனிநாடு குறித்த கோரிக்கைகள் நியாயப்படுத்தப்படும் நிலையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் இனப்படுகொலைகள் குறித்து கனடாவின் பிரகடனம்- ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என எச்சரிக்கை samugammedia இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்ற கனடாவின் பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.முன்னாள் கடற்படை தளபதியின் தலைமையில் நடைபெற்ற தேசிய பார்வை தொடர்பான கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில்  தெரிவித்த அவர்,   கனடாவின் அரசியல்நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும்  தான் தனிநபர் பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும், ஆதாரங்கள் அற்ற யுத்தகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கனடா விதித்துள்ள பயணத்தடைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்தினருக்கு கடும் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சவாலுக்கு உட்படுத்தாமல் தொடர அனுமதித்தால் அது தனிநாடு குறித்த கோரிக்கைகள் நியாயப்படுத்தப்படும் நிலையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement