• May 05 2024

சிறிலங்காவை துரத்தும் கனேடிய பொறி!

Tamil nila / Jan 31st 2023, 9:31 pm
image

Advertisement

அமெரிக்காவினுடைய அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலன் இரண்டு நாள் பயணமாக நாளை(1) கொழும்புக்கு வரவுள்ளார்.


இந்நிலையில் தமிழ் மக்கள் மீதான உதிரப் பலியை மையப்படுத்தி சிறிலங்காவுக்கு எதிராக வழக்குகளை தொடர, அன்று ஜேர்மனியின் நாசிகளுக்கு எதிராக எவ்வாறு நியூரம்பேர்க் நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ? அவ்வாறான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு நேற்று அழைப்பு விடுத்துள்ளது.


நியூரம்பேர்க் நீதிமன்ற கட்டமைப்பு



அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மூன்றாவது உயர் இராஜதந்திரியான விக்டோரியா நூலினின் பயணம் இடம்பெறும் முன்னர், அவரது இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதித்துறை பிரிவு பொறுப்பாளரான பெத்வான்ஸ் சா கடந்த 26 ஆம் திகதி கனடாவில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சந்தித்து பேசி இருந்தார்.


இந்த நிலையில் ஜேர்மனியின் நியூரம்பேர்க் பாணியில் சிறிலங்காவுக்காகவும் ஒரு நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடப்படுகிறது.


அண்மையில் கனடா, சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது தடைகளை விதித்த நிலையிலும் கனடாவின் வகிபாகம் பேசு பொருளாக மாறி இருக்கின்றது.


இப்போது கனேடிய புலம்பெயர் தமிழ் குழுக்கள் விடும் இந்த நியூரம்பேர்க் நீதிமன்ற கட்டமைப்பு கோரிக்கைக்கு பின்னால் கனடாவின் ஆசீர்வாதங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

சிறிலங்காவை துரத்தும் கனேடிய பொறி அமெரிக்காவினுடைய அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலன் இரண்டு நாள் பயணமாக நாளை(1) கொழும்புக்கு வரவுள்ளார்.இந்நிலையில் தமிழ் மக்கள் மீதான உதிரப் பலியை மையப்படுத்தி சிறிலங்காவுக்கு எதிராக வழக்குகளை தொடர, அன்று ஜேர்மனியின் நாசிகளுக்கு எதிராக எவ்வாறு நியூரம்பேர்க் நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ அவ்வாறான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு நேற்று அழைப்பு விடுத்துள்ளது.நியூரம்பேர்க் நீதிமன்ற கட்டமைப்புஅமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மூன்றாவது உயர் இராஜதந்திரியான விக்டோரியா நூலினின் பயணம் இடம்பெறும் முன்னர், அவரது இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதித்துறை பிரிவு பொறுப்பாளரான பெத்வான்ஸ் சா கடந்த 26 ஆம் திகதி கனடாவில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சந்தித்து பேசி இருந்தார்.இந்த நிலையில் ஜேர்மனியின் நியூரம்பேர்க் பாணியில் சிறிலங்காவுக்காகவும் ஒரு நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடப்படுகிறது.அண்மையில் கனடா, சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது தடைகளை விதித்த நிலையிலும் கனடாவின் வகிபாகம் பேசு பொருளாக மாறி இருக்கின்றது.இப்போது கனேடிய புலம்பெயர் தமிழ் குழுக்கள் விடும் இந்த நியூரம்பேர்க் நீதிமன்ற கட்டமைப்பு கோரிக்கைக்கு பின்னால் கனடாவின் ஆசீர்வாதங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement