• Feb 10 2025

தமிழரசு கட்சி உறுப்பினர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: சிறீதரன் எடுத்துள்ள தீர்மானம்

Chithra / Feb 9th 2025, 6:23 pm
image

 

இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் மீது திருகோணமலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

அக்கட்சியின் பதில் தலைவர், கந்தையா சிவஞானத்திற்கு அவர் இது தொடர்பில் உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பி அறிவித்துள்ளார். 

குறித்த கடிதத்தில், ”திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் சந்திரசேகரம் பரா என்பவரால் எமது கட்சி அங்கத்தவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை (வழக்கு இல: 6202/2024) முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 2ஆம்,  4ஆம், 7ஆம் எதிராளிகளான மூவரும் வரைபு இணக்க நியதிகளை 2025.02.07ஆம் திகதி, திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளோம்.

அதற்கமைய, சமர்ப்பிக்கப்பட்ட வரைபு இணக்க நியதிகளின் பிரதியையும், தங்களுடைய பார்வைக்காக அனுப்பிவைக்கிறேன்.

இந்த அடிப்படையில் எதிர்வரும் 2025.02.13ஆம் திகதி குறித்த நிபந்தனைகளை எதிராளிகளான நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையில் இந்த வரைபு இணக்க நியதிகளின் பிரதியையும் கடிதத்தினையும் தங்களுடைய மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேவேளை, இந்த இணக்கப்பாட்டு தீர்மானம் குறித்த கடிதத்தின் பிரதியானது, இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப. சத்தியலிங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழரசு கட்சி உறுப்பினர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: சிறீதரன் எடுத்துள்ள தீர்மானம்  இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் மீது திருகோணமலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் பதில் தலைவர், கந்தையா சிவஞானத்திற்கு அவர் இது தொடர்பில் உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பி அறிவித்துள்ளார். குறித்த கடிதத்தில், ”திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் சந்திரசேகரம் பரா என்பவரால் எமது கட்சி அங்கத்தவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை (வழக்கு இல: 6202/2024) முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 2ஆம்,  4ஆம், 7ஆம் எதிராளிகளான மூவரும் வரைபு இணக்க நியதிகளை 2025.02.07ஆம் திகதி, திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளோம்.அதற்கமைய, சமர்ப்பிக்கப்பட்ட வரைபு இணக்க நியதிகளின் பிரதியையும், தங்களுடைய பார்வைக்காக அனுப்பிவைக்கிறேன்.இந்த அடிப்படையில் எதிர்வரும் 2025.02.13ஆம் திகதி குறித்த நிபந்தனைகளை எதிராளிகளான நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையில் இந்த வரைபு இணக்க நியதிகளின் பிரதியையும் கடிதத்தினையும் தங்களுடைய மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த இணக்கப்பாட்டு தீர்மானம் குறித்த கடிதத்தின் பிரதியானது, இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப. சத்தியலிங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement