• Jan 23 2025

சீனாவில் காரை ஏற்றி பலரைக் கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Tharmini / Jan 20th 2025, 3:33 pm
image

சீனாவில் ஒரு விளையாட்டு அரங்கத்திற்கு வெளியே கூட்டத்திற்குள் காரைச் செலுத்தி பலரைக் கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஃபான் வெய்சியூ, 62, என்ற அந்த ஆடவர் கடந்த 2024 நவம்பர் 11ஆம் தேதி ஸுஹாய் நகரில் உடற்பயிற்சித் தடத்தில் தமது காரை ஓட்டிச் சென்று, அங்கிருந்தோர்மீது மோதியதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர்; 43 பேர் காயமடைந்தனர்.

கடந்த பத்தாண்டுகளில் சீனாவில் நிகழ்த்தப்பட்ட ஆகக் கொடூரமான தாக்குதல் இது எனக் கருதப்படுகிறது.

ஃபான் பின்னர் தன்னைத் தானே கத்தியால் தாக்கிக்கொண்டதாகவும் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டதாகவும் சம்பவம் நேர்ந்த சமயத்தில் காவல்துறை தெரிவித்திருந்தது.

மனைவியைச் சட்டரீதியாகப் பிரிந்தபின் மேற்கொள்ளப்பட்ட சொத்துப் பகிர்வு நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த ஃபான், ஆத்திரத்தில் அந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் இன்று (20) அது நிறைவேற்றப்பட்டது.

சீனாவில் காரை ஏற்றி பலரைக் கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் சீனாவில் ஒரு விளையாட்டு அரங்கத்திற்கு வெளியே கூட்டத்திற்குள் காரைச் செலுத்தி பலரைக் கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.ஃபான் வெய்சியூ, 62, என்ற அந்த ஆடவர் கடந்த 2024 நவம்பர் 11ஆம் தேதி ஸுஹாய் நகரில் உடற்பயிற்சித் தடத்தில் தமது காரை ஓட்டிச் சென்று, அங்கிருந்தோர்மீது மோதியதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர்; 43 பேர் காயமடைந்தனர்.கடந்த பத்தாண்டுகளில் சீனாவில் நிகழ்த்தப்பட்ட ஆகக் கொடூரமான தாக்குதல் இது எனக் கருதப்படுகிறது.ஃபான் பின்னர் தன்னைத் தானே கத்தியால் தாக்கிக்கொண்டதாகவும் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டதாகவும் சம்பவம் நேர்ந்த சமயத்தில் காவல்துறை தெரிவித்திருந்தது.மனைவியைச் சட்டரீதியாகப் பிரிந்தபின் மேற்கொள்ளப்பட்ட சொத்துப் பகிர்வு நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த ஃபான், ஆத்திரத்தில் அந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் இன்று (20) அது நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement