• May 18 2024

குறைந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு வழங்கும் நாடுகளில் முன்னிலை வகிக்கும் சீனா..! சி.வி.கே வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / Sep 23rd 2023, 2:26 pm
image

Advertisement

உலகில் சீனா குறைந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு வழங்கும் நாடாக திகழ்கின்ற நிலையில் தனது அடி மடியில் கை வைக்காத நிலையில் சீனா நடந்து கொள்கிறது என வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ். ஊடாக அமையத்தில் இன்று இடம்பொற்ற  ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாங்கள் அறிந்த வரையில் முன்னர் ஆப்கான் காரர்களே குறைந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு கொடுப்பவர்களாக அறிந்திருக்கிறோம்.

ஆனால் இந்நிலை மாறி சீனா தற்போது உலகில் குறைந்த பணத்தை கூடிய வட்டிக்கு கொடுக்கும் நாடாக மாறி வருகிறது.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் சீனாவே அதிக கடன்களை வழங்கியுள்ள நிலையில், தான் வழங்கிய கடனை எந்த வழியிலும் சீனா மீளப்பெறுவது நிச்சயம்.

சர்வதேச நாணய நிதியம் சீனா இலங்கைக்கு வழங்கிய கடன் தொடர்பில் சரியான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கூறி வரும் நிலையில் இதுவரை அவ்வாறு நடந்ததாக தெரியவில்லை.

நாங்கள் ஒன்றை கூறுகிறோம், இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் இதனை காரணமாக வைத்து கடன் வழங்குவது தொடர்பில் ஐஎம்எஸ் பரிசீலனை செய்ய வேண்டும்.

ஆகவே சீனாவிடம் இலங்கை பெற்ற கடனை எந்த வழியிலும்  சீனா மீளப் பெறுமே தவிர கொடுத்த கடனுக்காக தனது அடிமடியில் கை வைக்க விடாது. என்றார். 

குறைந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு வழங்கும் நாடுகளில் முன்னிலை வகிக்கும் சீனா. சி.வி.கே வெளியிட்ட தகவல் samugammedia உலகில் சீனா குறைந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு வழங்கும் நாடாக திகழ்கின்ற நிலையில் தனது அடி மடியில் கை வைக்காத நிலையில் சீனா நடந்து கொள்கிறது என வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.யாழ். ஊடாக அமையத்தில் இன்று இடம்பொற்ற  ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.நாங்கள் அறிந்த வரையில் முன்னர் ஆப்கான் காரர்களே குறைந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு கொடுப்பவர்களாக அறிந்திருக்கிறோம்.ஆனால் இந்நிலை மாறி சீனா தற்போது உலகில் குறைந்த பணத்தை கூடிய வட்டிக்கு கொடுக்கும் நாடாக மாறி வருகிறது.இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் சீனாவே அதிக கடன்களை வழங்கியுள்ள நிலையில், தான் வழங்கிய கடனை எந்த வழியிலும் சீனா மீளப்பெறுவது நிச்சயம்.சர்வதேச நாணய நிதியம் சீனா இலங்கைக்கு வழங்கிய கடன் தொடர்பில் சரியான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கூறி வரும் நிலையில் இதுவரை அவ்வாறு நடந்ததாக தெரியவில்லை.நாங்கள் ஒன்றை கூறுகிறோம், இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் இதனை காரணமாக வைத்து கடன் வழங்குவது தொடர்பில் ஐஎம்எஸ் பரிசீலனை செய்ய வேண்டும்.ஆகவே சீனாவிடம் இலங்கை பெற்ற கடனை எந்த வழியிலும்  சீனா மீளப் பெறுமே தவிர கொடுத்த கடனுக்காக தனது அடிமடியில் கை வைக்க விடாது. என்றார். 

Advertisement

Advertisement

Advertisement