• May 06 2024

டுபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல் - இலங்கை வாலிபர் அதிரடியாக கைது..! samugammedia

Chithra / Sep 23rd 2023, 2:35 pm
image

Advertisement

டுபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள (இந்திய ரூபா) 4 கிலோ தங்கத்தை மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் வருகை பகுதியில் இருந்து பன்னாட்டு புறப்பாடு பகுதிக்கு மாறக்கூடிய இடத்தில் கழிவறை ஒன்று உள்ளது. 

இங்குள்ள கழிவறைக்கு சென்ற விமான நிலைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், நீண்ட நேரத்திற்கு பின் வெளியே வருவதை கண்ட அங்கு பணியில் இருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை பொலிஸார் சந்தேகமடைந்தனர். 

பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் குமார் தலைமையிலான பொலிஸார் விமான ஊழியரை பின் தொடர்ந்து சென்று கண்காணித்தார். 

அவரை பாதுகாக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த ஊழியர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த பொலிஸார், உடனே அவரை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தினர். 

அதில், அவர் பெயர் சஞ்சய் என்பதும், அவரது உள்ளாடையில் 3 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் 3 கிலோ 930 கிராம் தங்கத்தை பசை வடிவில் மறைத்து வைத்து இருந்ததையும் கண்டுபிடித்தனர். 

இதையடுத்து அவரிடமிருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 3 கிலோ 930 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த பொலிஸார், அவரிடம் மேலும் விசாரணையில் இறங்கினர்.

விசாரணையில், டுபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த முகமது நிஸ்தார் அபூசாலி (32) என்பவர் தங்கத்தை கடத்தி வந்ததும், பின்னர் அதை தனியார் நிறுவன ஊழியர் மூலம் கழிவறையில் பரிமாறிவிட்டு கொழும்பு விமானத்தில் பயணம் செய்ய இருந்தது தெரியவந்தது. 

இதைதொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்துடன் முகமது நிஸ்தார் அபூசாலி என்ற இலங்கை வாலிபர், கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியர் ஆகியோரை மேல் நடவடிக்கைக்காக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலை கண்டுபிடித்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் குமாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

டுபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல் - இலங்கை வாலிபர் அதிரடியாக கைது. samugammedia டுபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள (இந்திய ரூபா) 4 கிலோ தங்கத்தை மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் வருகை பகுதியில் இருந்து பன்னாட்டு புறப்பாடு பகுதிக்கு மாறக்கூடிய இடத்தில் கழிவறை ஒன்று உள்ளது. இங்குள்ள கழிவறைக்கு சென்ற விமான நிலைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், நீண்ட நேரத்திற்கு பின் வெளியே வருவதை கண்ட அங்கு பணியில் இருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை பொலிஸார் சந்தேகமடைந்தனர். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் குமார் தலைமையிலான பொலிஸார் விமான ஊழியரை பின் தொடர்ந்து சென்று கண்காணித்தார். அவரை பாதுகாக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அந்த ஊழியர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த பொலிஸார், உடனே அவரை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தினர். அதில், அவர் பெயர் சஞ்சய் என்பதும், அவரது உள்ளாடையில் 3 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் 3 கிலோ 930 கிராம் தங்கத்தை பசை வடிவில் மறைத்து வைத்து இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடமிருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 3 கிலோ 930 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த பொலிஸார், அவரிடம் மேலும் விசாரணையில் இறங்கினர்.விசாரணையில், டுபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த முகமது நிஸ்தார் அபூசாலி (32) என்பவர் தங்கத்தை கடத்தி வந்ததும், பின்னர் அதை தனியார் நிறுவன ஊழியர் மூலம் கழிவறையில் பரிமாறிவிட்டு கொழும்பு விமானத்தில் பயணம் செய்ய இருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்துடன் முகமது நிஸ்தார் அபூசாலி என்ற இலங்கை வாலிபர், கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியர் ஆகியோரை மேல் நடவடிக்கைக்காக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலை கண்டுபிடித்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் குமாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Advertisement

Advertisement

Advertisement