• May 05 2024

வெள்ள நீரில் குளித்து விளையாடும் காகங்கள் - பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் வாகன சாரதிகள்! SamugamMedia

Chithra / Feb 27th 2023, 11:41 am
image

Advertisement

வீதியில் வெள்ள நீர் தேங்கி இருப்பதன் காரணமாக வாகன சாரதிகள் பாதசாரிகள் சிரமங்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ள யாட் வீதியில் தேங்கி கிடக்கின்ற வெள்ள நீர் காரணமாகவே இச்சிரமங்களுக்கு பொதுமக்கள் முகம் கொடுத்துள்ளனர்.

இவ்வீதியினுடாக அரச தனியார் உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் அன்றாடம் தமது போக்குவரத்து பாதையாக பாவித்து வருகின்றனர்.

இவ்வாறு வெள்ள நீர் தொடர்ச்சியாக தேங்கி வடிந்தோடாமல் காணப்படுவதனால் மாற்று பாதையை நாடுவதை அவதானிக்க முடிகின்றது.இச்சந்தரப்பத்தை பயன்படுத்தி அதிகமான காகங்கள் குளிக்கின்ற இடமாக இப்பாதை மாறி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இது தவிர வெள்ள நீர் தேங்கியுள்ள வீதியினால் பயணம் செய்கின்ற வாகனங்கள் திடிரென பழுதடைந்து தரித்து நிற்பதையும் காண முடிகின்றது.

மேலும் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


வெள்ள நீரில் குளித்து விளையாடும் காகங்கள் - பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் வாகன சாரதிகள் SamugamMedia வீதியில் வெள்ள நீர் தேங்கி இருப்பதன் காரணமாக வாகன சாரதிகள் பாதசாரிகள் சிரமங்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ள யாட் வீதியில் தேங்கி கிடக்கின்ற வெள்ள நீர் காரணமாகவே இச்சிரமங்களுக்கு பொதுமக்கள் முகம் கொடுத்துள்ளனர்.இவ்வீதியினுடாக அரச தனியார் உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் அன்றாடம் தமது போக்குவரத்து பாதையாக பாவித்து வருகின்றனர்.இவ்வாறு வெள்ள நீர் தொடர்ச்சியாக தேங்கி வடிந்தோடாமல் காணப்படுவதனால் மாற்று பாதையை நாடுவதை அவதானிக்க முடிகின்றது.இச்சந்தரப்பத்தை பயன்படுத்தி அதிகமான காகங்கள் குளிக்கின்ற இடமாக இப்பாதை மாறி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.இது தவிர வெள்ள நீர் தேங்கியுள்ள வீதியினால் பயணம் செய்கின்ற வாகனங்கள் திடிரென பழுதடைந்து தரித்து நிற்பதையும் காண முடிகின்றது.மேலும் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement