• May 18 2024

ஜெய்சங்கர் வருகையின்போது கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை: புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்து!

Chithra / Jan 15th 2023, 12:37 pm
image

Advertisement

எதிர்வரும் வியாழன் இங்கு வரவிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் திட்டமிடப்பட்ட விஜயத்தின் போது, இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய கடன் வழங்குனர்களில் ஒன்றான இந்தியாவுடன் அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனவரி 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யும்போது கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், ஜெய்சங்கரின் வருகையின் போது, இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

அதில் ஒன்று திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்திற்கானது.மற்றொன்று இந்தியாவுடனான மின்சா இணைப்புத் திட்டத்திற்கானது என்று தேசிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

ஜெய்சங்கர் வருகையின்போது கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை: புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்து எதிர்வரும் வியாழன் இங்கு வரவிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் திட்டமிடப்பட்ட விஜயத்தின் போது, இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முக்கிய கடன் வழங்குனர்களில் ஒன்றான இந்தியாவுடன் அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னதாக தெரிவித்திருந்தார்.இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனவரி 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யும்போது கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்தநிலையில், ஜெய்சங்கரின் வருகையின் போது, இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.அதில் ஒன்று திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்திற்கானது.மற்றொன்று இந்தியாவுடனான மின்சா இணைப்புத் திட்டத்திற்கானது என்று தேசிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement