மன்னார் பொது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் நேரில் ஆராய வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தின் பொது வைத்தியசாலையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. சுகாதார அமைச்சர் அல்லது பிரதி அமைச்சரை அந்த வைத்தியசாலைக்கு சென்று கள ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
அங்கே ஆளணி பற்றாக்குறையுடனும், தளபாட பற்றாக்குறையும் காணப்படுகின்றன. வளங்களை கொண்ட வைத்தியசாலையாக இது இல்லை என்பதனையும் கூறுகின்றேன். அங்கே அனுமதிக்கப்பட்ட ஆளணி வைத்தியர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்தாலும் ஒரு நிரந்தர வைத்திய நிபுணர்களும் இல்லை. தற்காலிக வைத்திய நிபுணர்களே உள்ளன. இதனால் தொடர்ச்சியாக தரமான சிகிச்சையை வழங்க முடியாமல் உள்ளது.
அத்துடன் ‘CT ஸ்கேன்’ இயந்திரம் மன்னார் மாவட்டத்தில் இல்லை. வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நோயாளர்கள் அனுப்பப்படுகின்றனர்.
அதற்கான கட்டிடங்கள் இருந்தாலும் அந்த இயந்திரம் இல்லை. இதனால் அதை மன்னாருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரிடம் முன்வைக்கின்றேன்.
இதேவேளை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவும் அங்கு இல்லை. அத்துடன் அங்கு குழந்தைகள் வைத்திய நிபுணர் ஒரு மாதமாக இல்லை. வவுனியா அல்லது யாழ்ப்பாணத்திற்கு குழந்தைகள் அனுப்பப்படுகின்றனர்.
பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மாரின் துன்பங்கள் வேதனைக்குரியதே. இது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். ஆளணி பற்றாக்குறை அங்கே இருப்பதால் அந்த வைத்தியசாலை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
மன்னார் வைத்தியசாலையில் குறைபாடுகள்: சுகாதார அமைச்சரிடம் செல்வம் எம்.பி கோரிக்கை. மன்னார் பொது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் நேரில் ஆராய வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மன்னார் மாவட்டத்தின் பொது வைத்தியசாலையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. சுகாதார அமைச்சர் அல்லது பிரதி அமைச்சரை அந்த வைத்தியசாலைக்கு சென்று கள ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன். அங்கே ஆளணி பற்றாக்குறையுடனும், தளபாட பற்றாக்குறையும் காணப்படுகின்றன. வளங்களை கொண்ட வைத்தியசாலையாக இது இல்லை என்பதனையும் கூறுகின்றேன். அங்கே அனுமதிக்கப்பட்ட ஆளணி வைத்தியர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்தாலும் ஒரு நிரந்தர வைத்திய நிபுணர்களும் இல்லை. தற்காலிக வைத்திய நிபுணர்களே உள்ளன. இதனால் தொடர்ச்சியாக தரமான சிகிச்சையை வழங்க முடியாமல் உள்ளது.அத்துடன் ‘CT ஸ்கேன்’ இயந்திரம் மன்னார் மாவட்டத்தில் இல்லை. வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நோயாளர்கள் அனுப்பப்படுகின்றனர். அதற்கான கட்டிடங்கள் இருந்தாலும் அந்த இயந்திரம் இல்லை. இதனால் அதை மன்னாருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரிடம் முன்வைக்கின்றேன்.இதேவேளை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவும் அங்கு இல்லை. அத்துடன் அங்கு குழந்தைகள் வைத்திய நிபுணர் ஒரு மாதமாக இல்லை. வவுனியா அல்லது யாழ்ப்பாணத்திற்கு குழந்தைகள் அனுப்பப்படுகின்றனர். பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மாரின் துன்பங்கள் வேதனைக்குரியதே. இது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். ஆளணி பற்றாக்குறை அங்கே இருப்பதால் அந்த வைத்தியசாலை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.