• Sep 20 2024

வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்..! விவசாயிகள் கவலை

Chithra / Jan 7th 2024, 2:53 pm
image

Advertisement


கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கண்டக்காடு, மயிலப்பஞ்சேனை,சோலை வெட்டுவான் முதலான இடங்களில் செய்கை  பண்ணப்பட்ட வயல் நிலங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுவதாக  எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இப்பகுதியில் சுமார் 250  ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் இம்முறை பெரும் போக வேளாண்மை பயிர் செய்கை   மேற்கொள்ளப்பட்டுள்ளது 

பராக்கிரமபாகு சமுத்திரம், மகாவலி, கந்தளாய்க்குளம் முதலான பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இவ்வாறு வெள்ள நீரினால் மூழ்கிய பகுதிகளில் ஒன்றான கிண்ணியா பரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட கண்டக்காடு, சோலை வெட்டுவான் முதலான இடங்களில் செய்கை  பண்ணப்பட்ட வயல் நிலங்களே  

இவ்வாறு நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன  

இதனால் கடன்பட்டு,கஷ்டப்பட்டு செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளதனால் 

பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளதாக விவசாயிகள் கவலை  தெரிவிக்கின்றனர்.


வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள். விவசாயிகள் கவலை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கண்டக்காடு, மயிலப்பஞ்சேனை,சோலை வெட்டுவான் முதலான இடங்களில் செய்கை  பண்ணப்பட்ட வயல் நிலங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுவதாக  எமது செய்தியாளர் தெரிவித்தார்.இப்பகுதியில் சுமார் 250  ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் இம்முறை பெரும் போக வேளாண்மை பயிர் செய்கை   மேற்கொள்ளப்பட்டுள்ளது பராக்கிரமபாகு சமுத்திரம், மகாவலி, கந்தளாய்க்குளம் முதலான பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.இவ்வாறு வெள்ள நீரினால் மூழ்கிய பகுதிகளில் ஒன்றான கிண்ணியா பரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட கண்டக்காடு, சோலை வெட்டுவான் முதலான இடங்களில் செய்கை  பண்ணப்பட்ட வயல் நிலங்களே  இவ்வாறு நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன  இதனால் கடன்பட்டு,கஷ்டப்பட்டு செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளதனால் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளதாக விவசாயிகள் கவலை  தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement