• May 04 2024

கனடாவில் காட்டுத் தீ..! மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்..!samugammedia

Sharmi / Jun 8th 2023, 9:45 am
image

Advertisement

கனடாவில் காட்டுத்தீ பரவி வரும் காரணத்தினால் நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டுத்தீ காரணமாக கனடாவில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மஞ்சள் நிற புகைமூட்டம் மேன்ஹேட்டன் நகரின் வானுயர்ந்த கட்டிங்களை மூழ்கடிக்க செய்திருக்கிறது. இதன் காரணமாக காற்று மாசு ஏற்பட்டதோடு, விமானங்கள் காலதாமதமாக கிளம்பி சென்றன. மேலும் விளையாட்டு நிகழ்வுகள் தாமதமாக துவங்கப்பட்டன.

 காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இருந்து சிகாகோவின் மேற்கு பகுதி மற்றும் தெற்கு அட்லாண்டா வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கனடாவில் காட்டுத் தீ. மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்.samugammedia கனடாவில் காட்டுத்தீ பரவி வரும் காரணத்தினால் நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக கனடாவில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மஞ்சள் நிற புகைமூட்டம் மேன்ஹேட்டன் நகரின் வானுயர்ந்த கட்டிங்களை மூழ்கடிக்க செய்திருக்கிறது. இதன் காரணமாக காற்று மாசு ஏற்பட்டதோடு, விமானங்கள் காலதாமதமாக கிளம்பி சென்றன. மேலும் விளையாட்டு நிகழ்வுகள் தாமதமாக துவங்கப்பட்டன. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இருந்து சிகாகோவின் மேற்கு பகுதி மற்றும் தெற்கு அட்லாண்டா வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement