• May 06 2024

மயான சுவர் இடிந்து விழுந்ததால் நால்வர் உயிரிழப்பு -இருவர் படுகாயம்...!!

Tamil nila / Apr 21st 2024, 11:29 am
image

Advertisement

மயான சுவர் இடிந்து விழுந்ததில் நால்வர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லி - குருகிராம் பகுதியில் குறித்த விபத்து இன்று  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் மயானத்துக்கு அருகாமையில் காணப்பட்ட சுவர் ஒன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 11 வயது சிறுமி உள்ளிட்ட மூவரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மேற்படி அர்ஜுன் நகர் காலனியில் வசிக்கும் தேவி தயாள் (70), கிரிஷன் குமார் (52), மனோஜ் கபா (41) மற்றும் 11 வயது சிறுமி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர்,,,

சம்பவத்திற்குப் பிறகு, தகன மைதானத்தின் பராமரிப்பாளரும் நிர்வாகக் குழு உறுப்பினரும் தங்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

சம்பவத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் அலட்சியம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் விபத்து இடம்பெற்ற காணொளிகள் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதுடன் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மயான சுவர் இடிந்து விழுந்ததால் நால்வர் உயிரிழப்பு -இருவர் படுகாயம். மயான சுவர் இடிந்து விழுந்ததில் நால்வர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.டெல்லி - குருகிராம் பகுதியில் குறித்த விபத்து இன்று  சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் மயானத்துக்கு அருகாமையில் காணப்பட்ட சுவர் ஒன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.உயிரிழந்தவர்களில் 11 வயது சிறுமி உள்ளிட்ட மூவரே உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் மேற்படி அர்ஜுன் நகர் காலனியில் வசிக்கும் தேவி தயாள் (70), கிரிஷன் குமார் (52), மனோஜ் கபா (41) மற்றும் 11 வயது சிறுமி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.படுகாயமடைந்த இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர்,,,சம்பவத்திற்குப் பிறகு, தகன மைதானத்தின் பராமரிப்பாளரும் நிர்வாகக் குழு உறுப்பினரும் தங்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.சம்பவத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.மேலும் அலட்சியம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.அத்துடன் விபத்து இடம்பெற்ற காணொளிகள் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதுடன் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement