• May 18 2024

யாழில் 880000 பெறுமதியான தங்க நகைகள் அபேஸ்..! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை samugammedia

Chithra / Jun 18th 2023, 11:00 am
image

Advertisement

யாழ்ப்பாணம் - பொன் கந்தையா வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றுமுன் தினம் (16) 880000 பெறுமதியான 6.5 தங்கப்பவுண் நகைகள்களவாடப்பட்டுள்ளது.  

அருகில் இருந்த நட்பு ரீதியான குடும்பத்தினராலேயே குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

நேற்று காலை வேலை நிமிர்த்தமாக வெளியில் சென்றிருத்த வீட்டின் உரிமையாளர் மதியம் 1 மணியளவில் வீட்டிற்கு திரும்பியருந்த போது வீட்டின் கதவு உடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

உள்ளே சென்று பார்த்த போது அலுமாரி லாஜ்ஜில் வைக்கப்பட்டிருந்த நகைகள் களவாடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாலை 4:30 மணியளவில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து உடனடியாக விசாரணையில் இறங்கிய கே.விமலவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஒரு மணித்தியாலத்திற்குள் சந்தேகநபரை கைது செய்து, நகைகளையும் மீட்டுள்ளனர்.

தனியார் நிதிநிறுவனத்தில் தாலிக்கொடி 3 3/4 பவுண் அடைவு வைத்து 3 இலட்சம் பணத்தைப் பெற்றுள்ளனர். 292000 பணத்தை மீட்டுள்ளதுடன் மகுதி நகை 2 3/4 பவுண் நகைகளை பிறதொரு வீட்டின் பூச்சாடியின் கீழ் வைத்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தாயாரான 24 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மற்றும் மீட்க்கப்பட்ட நகைகள் என்பன இன்று பருத்தித்துறை நீதிமன்றல் முற்படுத்த நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


யாழில் 880000 பெறுமதியான தங்க நகைகள் அபேஸ். பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை samugammedia யாழ்ப்பாணம் - பொன் கந்தையா வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றுமுன் தினம் (16) 880000 பெறுமதியான 6.5 தங்கப்பவுண் நகைகள்களவாடப்பட்டுள்ளது.  அருகில் இருந்த நட்பு ரீதியான குடும்பத்தினராலேயே குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.நேற்று காலை வேலை நிமிர்த்தமாக வெளியில் சென்றிருத்த வீட்டின் உரிமையாளர் மதியம் 1 மணியளவில் வீட்டிற்கு திரும்பியருந்த போது வீட்டின் கதவு உடைத்திருப்பது தெரியவந்துள்ளது.உள்ளே சென்று பார்த்த போது அலுமாரி லாஜ்ஜில் வைக்கப்பட்டிருந்த நகைகள் களவாடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.சம்பவம் தொடர்பில் மாலை 4:30 மணியளவில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக விசாரணையில் இறங்கிய கே.விமலவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஒரு மணித்தியாலத்திற்குள் சந்தேகநபரை கைது செய்து, நகைகளையும் மீட்டுள்ளனர்.தனியார் நிதிநிறுவனத்தில் தாலிக்கொடி 3 3/4 பவுண் அடைவு வைத்து 3 இலட்சம் பணத்தைப் பெற்றுள்ளனர். 292000 பணத்தை மீட்டுள்ளதுடன் மகுதி நகை 2 3/4 பவுண் நகைகளை பிறதொரு வீட்டின் பூச்சாடியின் கீழ் வைத்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.இரண்டு பிள்ளைகளின் தாயாரான 24 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் மற்றும் மீட்க்கப்பட்ட நகைகள் என்பன இன்று பருத்தித்துறை நீதிமன்றல் முற்படுத்த நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement