• May 06 2024

30 பண்ணைகளை இந்தியாவிற்கு விற்க தயாராகும் அரசாங்கம்..! - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு samugammedia

Chithra / Oct 18th 2023, 9:12 am
image

Advertisement

 

மிலகோ நிறுவனம் மற்றும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 30 பண்ணைகளை இந்திய அமுல் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்த கூட்டு வியாபார நிறுவனமாக நிறுவ அரசாங்கம் தயாராகி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  (17)  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருத்தமான அரச, தனியார் கூட்டாண்மை மாதிரியை அடையாளம் காணாமல், பல அரச முயற்சியாண்மைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்வதன் மூலம்,

இந்நாட்டில் பொது வளங்கள் சரியான மதிப்பீடு இல்லாமல் குறைவாக மதிப்பிடப்பட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கை மாற்றுவதும், மோசடி மற்றும் ஊழலுக்கு இடம் கொடுப்பதுமே இடம்பெறுகிறது.

அத்துடன் அரசாங்கத்தின் இந்த தீர்மானம் காரணமாக இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. 

அரசாங்கம் இவ்வாறு விற்பனை செய்ய முற்படுவது  கொழும்பு பால் நிறுவனம், அம்பேவெல ஸ்பிரே டை தொழிற்சாலை, திகன பால் தொழிற்சாலை, பொலன்னறுவை தொழிற்சாலை மற்றும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட பண்ணைகள் என்பனவாகும்.

இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் வினவிய போது,ஜனாதிபதி செயலகத்தினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தில் தான் கையொப்பமிட்டதாக சம்பந்தப்பட்ட விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக குறித்த அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். உள்நாட்டு பாலை வைத்து நாடு தன்னிறைவு அடையும் என்று எல்லா மேடைகளிலும் பேசப்பட்டாலும், தற்போது இந்த பண்ணைகளை விற்பதற்கு இடமளிக்க முடியாது. 

அத்துடன் அரசாங்கம் இது தொடர்பில் இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது. 

அதனால் குறித்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? அந்த ஒப்பந்தத்தில் இருக்கும் விடயங்களை அரசாங்கம் வெளிப்படுத்துமா என கேட்கிறோம் என்றார்.

30 பண்ணைகளை இந்தியாவிற்கு விற்க தயாராகும் அரசாங்கம். - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு samugammedia  மிலகோ நிறுவனம் மற்றும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 30 பண்ணைகளை இந்திய அமுல் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்த கூட்டு வியாபார நிறுவனமாக நிறுவ அரசாங்கம் தயாராகி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று  (17)  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.பொருத்தமான அரச, தனியார் கூட்டாண்மை மாதிரியை அடையாளம் காணாமல், பல அரச முயற்சியாண்மைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்வதன் மூலம்,இந்நாட்டில் பொது வளங்கள் சரியான மதிப்பீடு இல்லாமல் குறைவாக மதிப்பிடப்பட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கை மாற்றுவதும், மோசடி மற்றும் ஊழலுக்கு இடம் கொடுப்பதுமே இடம்பெறுகிறது.அத்துடன் அரசாங்கத்தின் இந்த தீர்மானம் காரணமாக இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அரசாங்கம் இவ்வாறு விற்பனை செய்ய முற்படுவது  கொழும்பு பால் நிறுவனம், அம்பேவெல ஸ்பிரே டை தொழிற்சாலை, திகன பால் தொழிற்சாலை, பொலன்னறுவை தொழிற்சாலை மற்றும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட பண்ணைகள் என்பனவாகும்.இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் வினவிய போது,ஜனாதிபதி செயலகத்தினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தில் தான் கையொப்பமிட்டதாக சம்பந்தப்பட்ட விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குறித்த அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். உள்நாட்டு பாலை வைத்து நாடு தன்னிறைவு அடையும் என்று எல்லா மேடைகளிலும் பேசப்பட்டாலும், தற்போது இந்த பண்ணைகளை விற்பதற்கு இடமளிக்க முடியாது. அத்துடன் அரசாங்கம் இது தொடர்பில் இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது. அதனால் குறித்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா அந்த ஒப்பந்தத்தில் இருக்கும் விடயங்களை அரசாங்கம் வெளிப்படுத்துமா என கேட்கிறோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement