பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை நியமிப்பதே தமது விருப்பம் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் தெரிவித்தார்.
அதன்படி எதிர்வரும் 26ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள பதில் பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மற்றும் நிரந்தர பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதேவேளை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்றும் அதில் பிரச்சனை இல்லை. அரச தரப்பில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லை
எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அரசியல் நிர்ணய சபை வித்தியாசமாக வேலை செய்கிறார்கள் என்றும் மக்கள் அனைவரும் அனுமதித்தால் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தத் தயாரில்லை.
மேலும், 2023 டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட “யுக்திய” நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 7.8 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேஷ்பந்து தென்னகோனை நியமிப்பதே விருப்பம். பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை நியமிப்பதே தமது விருப்பம் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் தெரிவித்தார்.அதன்படி எதிர்வரும் 26ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள பதில் பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மற்றும் நிரந்தர பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இதேவேளை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்றும் அதில் பிரச்சனை இல்லை. அரச தரப்பில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லைஎனவும் அவர் தெரிவித்தார்.ஆனால் அரசியல் நிர்ணய சபை வித்தியாசமாக வேலை செய்கிறார்கள் என்றும் மக்கள் அனைவரும் அனுமதித்தால் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தத் தயாரில்லை.மேலும், 2023 டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட “யுக்திய” நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 7.8 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.