• May 18 2024

அரசுக்கெதிராக ஒட்டுமொத்த மக்களையும் வீதிக்கு இறக்குவேன்....! முக்கிய தேரர் எச்சரிக்கை...! samugammedia

Sharmi / Oct 2nd 2023, 11:00 am
image

Advertisement

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார பாதிப்பினை நடுத்தர மக்கள் மீது சுமத்தி விட்டு அரசியல்வாதிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை மேற்கொள்கிறார்கள். வங்குரோத்து நிலைக்கு மத்தியிலும் அரசியல்வாதிகளுக்கான சலுகைகள் ஏதும் குறைக்கப்படவில்லை.மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து வீதிக்கு இறங்குவேன் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார பாதிப்புக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. ஆனால் தற்போதைய பொருளாதார பாதிப்பின் சுமை ஒட்டுமொத்த மக்கள் மீதும் மனசாட்சியில்லாத வகையில் திணிக்கப்பட்டுள்ளது.பொருளாதார பாதிப்பினாலும் வாழ்க்கை சுமையினாலும் நடுத்தர குடும்பங்களின் சுகாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. பொருளாதார பாதிப்பினால் நடுத்தர மக்கள் வாழ்வதா? அல்லது இறப்பதா ? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடியின் சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் மாத்திரம் விடுமுறையை கழிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை மேற்கொள்கிறார்கள். பெரும்பாலான அரசியல்வாதிகள் நாட்டில் இருப்பதே இல்லை. வங்குரோத்து நிலைக்கு மத்தியில் அரசியல்வாதிகளுக்கான சலுகைகள் ஏதும் குறைக்கப்படவில்லை. அவர்கள் சுகபோகமாகவே வாழ்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.


அரசுக்கெதிராக ஒட்டுமொத்த மக்களையும் வீதிக்கு இறக்குவேன். முக்கிய தேரர் எச்சரிக்கை. samugammedia நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார பாதிப்பினை நடுத்தர மக்கள் மீது சுமத்தி விட்டு அரசியல்வாதிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை மேற்கொள்கிறார்கள். வங்குரோத்து நிலைக்கு மத்தியிலும் அரசியல்வாதிகளுக்கான சலுகைகள் ஏதும் குறைக்கப்படவில்லை.மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து வீதிக்கு இறங்குவேன் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,பொருளாதார பாதிப்புக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. ஆனால் தற்போதைய பொருளாதார பாதிப்பின் சுமை ஒட்டுமொத்த மக்கள் மீதும் மனசாட்சியில்லாத வகையில் திணிக்கப்பட்டுள்ளது.பொருளாதார பாதிப்பினாலும் வாழ்க்கை சுமையினாலும் நடுத்தர குடும்பங்களின் சுகாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. பொருளாதார பாதிப்பினால் நடுத்தர மக்கள் வாழ்வதா அல்லது இறப்பதா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.பொருளாதார நெருக்கடியின் சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் மாத்திரம் விடுமுறையை கழிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை மேற்கொள்கிறார்கள். பெரும்பாலான அரசியல்வாதிகள் நாட்டில் இருப்பதே இல்லை. வங்குரோத்து நிலைக்கு மத்தியில் அரசியல்வாதிகளுக்கான சலுகைகள் ஏதும் குறைக்கப்படவில்லை. அவர்கள் சுகபோகமாகவே வாழ்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement