• May 06 2024

மக்கள் போராட்டங்களை நிறுத்தவேண்டுமெனில் உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துங்கள்..! மரிக்கார் தெரிவிப்பு...!samugammedia

Sharmi / Nov 30th 2023, 1:41 pm
image

Advertisement

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்துவதை அரசாங்கம் விரும்பவில்லை என்றால் உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். 

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகளில் செலவுகள் மட்டுமே உள்ளதாகவும், வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட செலவினங்களை வழங்குவதற்கு நாட்டுக்கு வருமானம் தேவை என்பதை காட்டவில்லை எனவும், அவ்வாறான வருமானத்தைப் பெறும் முறை எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் மரிக்கார் தெரிவித்தார்.

ஜனாதிபதி மீண்டும் வெளிநாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். அவர் எத்தனை முறை நாட்டுக்கு சென்றார் என்பது எங்களுக்குத் தெரியாது. நாட்டுப் பயணங்களால் இலங்கைக்கு என்ன கிடைத்தது என்பது எங்களுக்குத் தெரியாது, நாட்டு மக்களுக்கும் தெரியாது. 

ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் செல்லாத போது வார இறுதி நாட்களில் கொழும்புக்கு வெளியில் உள்ள மாகாணங்களுக்குச் சென்று பல்வேறு விசித்திரக் கதைகளைச் சொல்கிறார்.

இந்நிலையில் மக்களை அழுத்தத்திலிருந்து விடுவிக்க நியாயமான முறையில் தேர்தலை சரியான நேரத்தில் நடத்துங்கள் எனவும் தெரிவித்தார்.


மக்கள் போராட்டங்களை நிறுத்தவேண்டுமெனில் உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துங்கள். மரிக்கார் தெரிவிப்பு.samugammedia அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்துவதை அரசாங்கம் விரும்பவில்லை என்றால் உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,2024ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகளில் செலவுகள் மட்டுமே உள்ளதாகவும், வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட செலவினங்களை வழங்குவதற்கு நாட்டுக்கு வருமானம் தேவை என்பதை காட்டவில்லை எனவும், அவ்வாறான வருமானத்தைப் பெறும் முறை எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் மரிக்கார் தெரிவித்தார். ஜனாதிபதி மீண்டும் வெளிநாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். அவர் எத்தனை முறை நாட்டுக்கு சென்றார் என்பது எங்களுக்குத் தெரியாது. நாட்டுப் பயணங்களால் இலங்கைக்கு என்ன கிடைத்தது என்பது எங்களுக்குத் தெரியாது, நாட்டு மக்களுக்கும் தெரியாது. ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் செல்லாத போது வார இறுதி நாட்களில் கொழும்புக்கு வெளியில் உள்ள மாகாணங்களுக்குச் சென்று பல்வேறு விசித்திரக் கதைகளைச் சொல்கிறார்.இந்நிலையில் மக்களை அழுத்தத்திலிருந்து விடுவிக்க நியாயமான முறையில் தேர்தலை சரியான நேரத்தில் நடத்துங்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement