• Sep 20 2024

புத்தளத்தில் சஜித் ஜனாதிபதியானால் பெண்களுக்கு என விஷேட திட்டம் வகுக்கப்படும் - ஹருனிகா பிரேமச்சந்திர தெரிவிப்பு!

Tamil nila / Aug 26th 2024, 10:40 pm
image

Advertisement

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் நாட்டின் பொருளாதாரத்தில் எழுச்சி ஏற்படும் எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர, சஜிதின் ஆட்சியில் பெண்களுக்கு என விஷேட திட்டம் ஒன்றும் வகுக்கப்படும் எனவும் இன்று புத்தளத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரமதாஸவை வெற்றி பெறச் செய்யும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று புத்தளம் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நடைபெற்றது.


முந்தல் - வட்டவான் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புத்தளம் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலான மக்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் பேசுகையில் கூறியதாவது,

வரும் ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயமாக வெற்றி பெரும் என்பதில் சந்தேகமில்லை.

புத்தளத்தில் ஒரு இலட்சத்திற்கு மேல் வாக்குகளை எமது கட்சி பெறவேண்டும். புத்தளம்தான் முழு மாவட்டத்தையும் வெற்றிப் பெறச் செய்யும் தொகுதியாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களையும் ஒருமுறை எடுத்துப் பாருங்கள். அநுர குமார திசாநாயக்க நன்றாக பேசுவார். அவரால் பேச மட்டும்தான் முடியும். 

நாட்டு மக்களுக்கு இதுவரை அவரும், அவர் சார்ந்த கட்சியும் காத்திரமான நல்ல பணிகளை முன்னெடுக்கவில்லை. இனியும் அவர்கள் எதனையும் செய்யப் போவதுமில்லை. அவர் வகிக்கும் கட்சியின் பெயரைக் கேட்டால் மக்களுக்கு ஒருவிதமான அச்சம் இன்றும் இருக்கிறது.

நாமல் ராஜபக்சவும் ஒரு வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தவர்கள் நாமலுடைய சித்தப்பாக்கள்தான்.

நாட்டை கொள்ளையடித்து வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்கள் என்பது தெளிவான உண்மையாகும். இதனால், அவரைப் பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

அன்று தொலைபேசி சின்னத்தில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்த போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நாங்கள் பிளவுகளை ஏற்படுத்தினோம் என்று சொன்னார்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டில் யானையின் சின்னமும் இல்லை. கட்சியின் பெயரும் இல்லை.

இந்த நாட்டின் வரலாற்றில் இடம்பிடித்த மிகவும் பழமைவாய்ந்த கட்சிதான் ஐக்கிய தேசியக் கட்சியாகும். இந்தக் கட்சி பல அரசியல் தலைவர்களை உருவாக்கியது. நாட்டு மக்களுக்கு பல வருடங்கள் சேவைகளை செய்தது.

வருடக்கணக்கில் யானைச் சின்னத்தில் அரசியலில் பயணித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மொட்டுக் கட்சியிலிருந்து வந்த 92 பேருக்காக கட்சியையும், சின்னத்தையும் முழுமையாக தாரைவார்த்து விட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் டி.எஸ்.சேனநாயக்கவின் படத்திற்கு பக்கத்தில் இருந்த யானைக்கு மேல் சிலிண்டர் சின்னத்தின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். இது என்ன அரசியல் கலாச்சாரம் என்று அவர்களிடம் கேட்கிறேன்.

அரசியலில் நேராக பயணிக்க முடியும் என்று மிகவும் தைரியத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கப்பட்டது.

இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சுயநலத்திற்காக மட்டுமன்றி, யாருக்காகவும் கட்சியின் கொள்கைகளையும், சின்னத்தையும் விட்டுக்கொடுக்காது சஜித் பிரேமதாச சிறந்த தலைமைத்துவத்தோடு வழிநடத்திச் செல்கிறார்.

எமது கட்சியின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாமல், கட்சியையும் தூக்கியெறிந்து விட்டு அடுத்த பக்கம் செல்கிறவர்கள் இந்த நாட்டை காப்பாற்ற செல்லவில்லை. தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்க, வரப்பிரசாதங்களை பெறவே அடுத்த பக்கம் செல்கிறார்கள். 

இன்று வரிசை யுகத்தை ஞாபகப்படுத்தி வாக்கு கேட்கிறார்கள். தமக்கு வாக்களிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கே செல்ல வேண்டி வரும் என எச்சரிக்கிறார்கள். அவ்வாறு கூறுபவர்கே அந்த வரிசை யுகத்தை உருவாக்கினார்கள்.

இந்த நாட்டு மக்கள் இப்போது ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். சஜித் பிரேமதாச இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று அரசியல் அரங்கு மாத்திரமின்றி, பெரும்பாலான மக்களும் ஆசைப்படுகிறார்கள்.

சஜித் பிரேமதாச சிறந்த தலைவராகவும், வேகமாக பணியாற்றக் கூடிய ஒருவராகவும் காணப்படுகிறார்.

எல்லோரினதும் எதிர்பார்ப்புகளின் படி சஜித் பிரேமதாச பெரும்பான்மையான வாக்குகளுடன் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகி, நாட்டு மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பார்.

மாத்திரமன்றி, பொருளாதார எழுச்சியை ஏற்படுத்துவது மாத்திரமின்றி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், விவசாயிகள், மீனவர்கள், அரச ஊழியர்கள் என அனைவரும் பயன்பெறக் கூடிய வகையில் திட்டங்களை வகுத்து அனைவரும் விரும்பக் கூடிய ஒரு தலைவராக இருப்பார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் இந்த நாட்டில் வாழும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் விஷேட திட்டமொன்றும் வகுத்து வருகிறோம் என்றார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர, முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடப்பு ஸ்ரீ வீர பத்திர காளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.

புத்தளத்தில் சஜித் ஜனாதிபதியானால் பெண்களுக்கு என விஷேட திட்டம் வகுக்கப்படும் - ஹருனிகா பிரேமச்சந்திர தெரிவிப்பு சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் நாட்டின் பொருளாதாரத்தில் எழுச்சி ஏற்படும் எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர, சஜிதின் ஆட்சியில் பெண்களுக்கு என விஷேட திட்டம் ஒன்றும் வகுக்கப்படும் எனவும் இன்று புத்தளத்தில் தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரமதாஸவை வெற்றி பெறச் செய்யும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று புத்தளம் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நடைபெற்றது.முந்தல் - வட்டவான் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.புத்தளம் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலான மக்களும் கலந்து கொண்டனர்.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் பேசுகையில் கூறியதாவது,வரும் ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயமாக வெற்றி பெரும் என்பதில் சந்தேகமில்லை.புத்தளத்தில் ஒரு இலட்சத்திற்கு மேல் வாக்குகளை எமது கட்சி பெறவேண்டும். புத்தளம்தான் முழு மாவட்டத்தையும் வெற்றிப் பெறச் செய்யும் தொகுதியாகும்.ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களையும் ஒருமுறை எடுத்துப் பாருங்கள். அநுர குமார திசாநாயக்க நன்றாக பேசுவார். அவரால் பேச மட்டும்தான் முடியும். நாட்டு மக்களுக்கு இதுவரை அவரும், அவர் சார்ந்த கட்சியும் காத்திரமான நல்ல பணிகளை முன்னெடுக்கவில்லை. இனியும் அவர்கள் எதனையும் செய்யப் போவதுமில்லை. அவர் வகிக்கும் கட்சியின் பெயரைக் கேட்டால் மக்களுக்கு ஒருவிதமான அச்சம் இன்றும் இருக்கிறது.நாமல் ராஜபக்சவும் ஒரு வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தவர்கள் நாமலுடைய சித்தப்பாக்கள்தான்.நாட்டை கொள்ளையடித்து வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்கள் என்பது தெளிவான உண்மையாகும். இதனால், அவரைப் பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.அன்று தொலைபேசி சின்னத்தில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்த போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நாங்கள் பிளவுகளை ஏற்படுத்தினோம் என்று சொன்னார்.இன்று ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டில் யானையின் சின்னமும் இல்லை. கட்சியின் பெயரும் இல்லை.இந்த நாட்டின் வரலாற்றில் இடம்பிடித்த மிகவும் பழமைவாய்ந்த கட்சிதான் ஐக்கிய தேசியக் கட்சியாகும். இந்தக் கட்சி பல அரசியல் தலைவர்களை உருவாக்கியது. நாட்டு மக்களுக்கு பல வருடங்கள் சேவைகளை செய்தது.வருடக்கணக்கில் யானைச் சின்னத்தில் அரசியலில் பயணித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மொட்டுக் கட்சியிலிருந்து வந்த 92 பேருக்காக கட்சியையும், சின்னத்தையும் முழுமையாக தாரைவார்த்து விட்டார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் டி.எஸ்.சேனநாயக்கவின் படத்திற்கு பக்கத்தில் இருந்த யானைக்கு மேல் சிலிண்டர் சின்னத்தின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். இது என்ன அரசியல் கலாச்சாரம் என்று அவர்களிடம் கேட்கிறேன்.அரசியலில் நேராக பயணிக்க முடியும் என்று மிகவும் தைரியத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கப்பட்டது.இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சுயநலத்திற்காக மட்டுமன்றி, யாருக்காகவும் கட்சியின் கொள்கைகளையும், சின்னத்தையும் விட்டுக்கொடுக்காது சஜித் பிரேமதாச சிறந்த தலைமைத்துவத்தோடு வழிநடத்திச் செல்கிறார்.எமது கட்சியின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாமல், கட்சியையும் தூக்கியெறிந்து விட்டு அடுத்த பக்கம் செல்கிறவர்கள் இந்த நாட்டை காப்பாற்ற செல்லவில்லை. தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்க, வரப்பிரசாதங்களை பெறவே அடுத்த பக்கம் செல்கிறார்கள். இன்று வரிசை யுகத்தை ஞாபகப்படுத்தி வாக்கு கேட்கிறார்கள். தமக்கு வாக்களிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கே செல்ல வேண்டி வரும் என எச்சரிக்கிறார்கள். அவ்வாறு கூறுபவர்கே அந்த வரிசை யுகத்தை உருவாக்கினார்கள்.இந்த நாட்டு மக்கள் இப்போது ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். சஜித் பிரேமதாச இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று அரசியல் அரங்கு மாத்திரமின்றி, பெரும்பாலான மக்களும் ஆசைப்படுகிறார்கள்.சஜித் பிரேமதாச சிறந்த தலைவராகவும், வேகமாக பணியாற்றக் கூடிய ஒருவராகவும் காணப்படுகிறார்.எல்லோரினதும் எதிர்பார்ப்புகளின் படி சஜித் பிரேமதாச பெரும்பான்மையான வாக்குகளுடன் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகி, நாட்டு மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பார்.மாத்திரமன்றி, பொருளாதார எழுச்சியை ஏற்படுத்துவது மாத்திரமின்றி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், விவசாயிகள், மீனவர்கள், அரச ஊழியர்கள் என அனைவரும் பயன்பெறக் கூடிய வகையில் திட்டங்களை வகுத்து அனைவரும் விரும்பக் கூடிய ஒரு தலைவராக இருப்பார்.சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் இந்த நாட்டில் வாழும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் விஷேட திட்டமொன்றும் வகுத்து வருகிறோம் என்றார்.தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர, முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடப்பு ஸ்ரீ வீர பத்திர காளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement