ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் பதவியை இராஜினாமா செய்யலாம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ரயில் திணைக்கள அதிகாரிகள், ரயில்களை முறையாக பராமரிக்கத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுடன் களுத்துறை மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
குறிப்பாக காலி மற்றும் கொழும்பு இடையே இயக்கப்படும் முக்கிய ரயில்ளில் உடைந்த ஜன்னல்கள், செயல்படாத மின்விசிறிகள் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் போன்ற பிரச்சினைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.
ஒரு சிறுவன் தனது முதல் ரயில் பயணத்தின் போது ஒரு பழுதடைந்த ஜன்னலில் இருந்து விழுந்து இரண்டு விரல்களை இழந்த ஒரு துயர சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு மோசமான சேவையை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? குறிப்பாக ஒரு மாதத்திற்குள் கழிப்பறைகள், ஜன்னல்கள், மின்விசிறிகள் போன்றவற்றில் தெளிவான பழுதுபார்ப்புகளைக் காண விரும்புகிறேன்.
அடிப்படை சேவையை வழங்க முடியாவிட்டால், வெளியேறுங்கள். இது இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சேவையை முறையாக வழங்க முடியாவிட்டால் இராஜினாமா செய்யுங்கள் அமைச்சர் கடும் எச்சரிக்கை ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் பதவியை இராஜினாமா செய்யலாம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.ரயில் திணைக்கள அதிகாரிகள், ரயில்களை முறையாக பராமரிக்கத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுடன் களுத்துறை மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், குறிப்பாக காலி மற்றும் கொழும்பு இடையே இயக்கப்படும் முக்கிய ரயில்ளில் உடைந்த ஜன்னல்கள், செயல்படாத மின்விசிறிகள் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் போன்ற பிரச்சினைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.ஒரு சிறுவன் தனது முதல் ரயில் பயணத்தின் போது ஒரு பழுதடைந்த ஜன்னலில் இருந்து விழுந்து இரண்டு விரல்களை இழந்த ஒரு துயர சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வளவு மோசமான சேவையை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும் குறிப்பாக ஒரு மாதத்திற்குள் கழிப்பறைகள், ஜன்னல்கள், மின்விசிறிகள் போன்றவற்றில் தெளிவான பழுதுபார்ப்புகளைக் காண விரும்புகிறேன்.அடிப்படை சேவையை வழங்க முடியாவிட்டால், வெளியேறுங்கள். இது இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.