• Sep 19 2025

மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையை கோரும் நீதிமன்றம்

Chithra / Sep 18th 2025, 9:08 am
image


யாழ்ப்பாணம், மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவிடம் நீதிமன்றம் கோரியுள்ளது. 

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த புதைகுழி வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனையடுத்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்குக் குற்றத்தடுப்பு பிரிவினர் கால அவகாசம் கோரியுள்ளனர். 

இந்நிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மண்டைத்தீவு மனிதப் புதைகுழி அகழ்விற்குத் தேவையான வசதிகள் இல்லை என ஊர்காவற்துறை காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து, குறித்த வழக்கை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பாரப்படுத்த முன்னதாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

1991 ஆம் ஆண்டில் தீவகப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது சுட்டுக்கொலை செய்யப்பட்ட செய்யப்பட்டதாகக் கூறப்படும் பொதுமக்கள், மண்டைதீவிலுள்ள சில இடங்களில் புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையை கோரும் நீதிமன்றம் யாழ்ப்பாணம், மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவிடம் நீதிமன்றம் கோரியுள்ளது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த புதைகுழி வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்குக் குற்றத்தடுப்பு பிரிவினர் கால அவகாசம் கோரியுள்ளனர். இந்நிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மண்டைத்தீவு மனிதப் புதைகுழி அகழ்விற்குத் தேவையான வசதிகள் இல்லை என ஊர்காவற்துறை காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து, குறித்த வழக்கை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பாரப்படுத்த முன்னதாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 1991 ஆம் ஆண்டில் தீவகப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது சுட்டுக்கொலை செய்யப்பட்ட செய்யப்பட்டதாகக் கூறப்படும் பொதுமக்கள், மண்டைதீவிலுள்ள சில இடங்களில் புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement