ஆளுந்தரப்பினர் மீது சொத்து விபரங்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆளுந்தரப்பினர் மீது சொத்து விபரங்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கு கிடைத்துள்ள சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும்.
விசாரணைகளில் எவரேனும் தவறிழைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் தாம் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்ததாக ஜே.வி.பி.யினர் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால் தற்போது அவர்கள் கூறியதை விட முற்றிலும் மாறுபட்ட நிலைமையே காணப்படுகிறது.
இதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இதன் ஊடாக அவர்கள் தமது ஆதரவாளர்களையும், கட்சி அங்கத்தவர்களையும் ஏமாற்றியிருப்பார்களாயின் அதனை அனுமதிக்க முடியாது. என்றார்.
ஆளுந்தரப்பினரின் சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் - வலியுறுத்தும் மஹிந்த ஆளுந்தரப்பினர் மீது சொத்து விபரங்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆளுந்தரப்பினர் மீது சொத்து விபரங்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கு கிடைத்துள்ள சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும். விசாரணைகளில் எவரேனும் தவறிழைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.கடந்த காலங்களில் தாம் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்ததாக ஜே.வி.பி.யினர் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால் தற்போது அவர்கள் கூறியதை விட முற்றிலும் மாறுபட்ட நிலைமையே காணப்படுகிறது. இதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இதன் ஊடாக அவர்கள் தமது ஆதரவாளர்களையும், கட்சி அங்கத்தவர்களையும் ஏமாற்றியிருப்பார்களாயின் அதனை அனுமதிக்க முடியாது. என்றார்.