முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபை அமர்வுக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க விடாது பிரதேசசபை தவிசாளர் திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேசசபை அமர்வானது இன்றையதினம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த அமர்வினை செய்தி சேகரிக்க ஊடகவியலாளர் சென்றபோது அனுமதி பெற்றே செய்தி சேகரிக்க வரவேண்டும் என பிரதேசசபை தவிசாளர் திருப்பியனுப்பியுள்ளார்.
அதனையடுத்து உடனடியாக அனுமதி கடிதத்தினை ஊடகவியலாளர் எழுதி வழங்கிய போது இப்போது கடிதம் வழங்கினால் உடனே ஆயத்தம் செய்ய முடியாது எனவும், இரண்டு நாட்களுக்கு முன்னரே அனுமதி பெற கடிதம் வழங்க வேண்டும் என கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளார் சின்னராசா லோகேஸ்வரன், பிரதேசசபை செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமார் கூறி திருப்பியனுப்பியுள்ளனர்.
சில உள்ளூராட்சி சபைகளில் சபை அமர்வினை நேரலை ஒலிபரப்பு மேற்கொள்ளுகிறார்கள். அப்படி இருக்கும்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையில் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டமையானது உள்நோக்கம் ஏதோ இருப்பதாகவே கருத தோன்றுகின்றது.
முல்லைத்தீவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு; திருப்பி அனுப்பிய பிரதேச சபை முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபை அமர்வுக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க விடாது பிரதேசசபை தவிசாளர் திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.கரைதுறைப்பற்று பிரதேசசபை அமர்வானது இன்றையதினம் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த அமர்வினை செய்தி சேகரிக்க ஊடகவியலாளர் சென்றபோது அனுமதி பெற்றே செய்தி சேகரிக்க வரவேண்டும் என பிரதேசசபை தவிசாளர் திருப்பியனுப்பியுள்ளார்.அதனையடுத்து உடனடியாக அனுமதி கடிதத்தினை ஊடகவியலாளர் எழுதி வழங்கிய போது இப்போது கடிதம் வழங்கினால் உடனே ஆயத்தம் செய்ய முடியாது எனவும், இரண்டு நாட்களுக்கு முன்னரே அனுமதி பெற கடிதம் வழங்க வேண்டும் என கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளார் சின்னராசா லோகேஸ்வரன், பிரதேசசபை செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமார் கூறி திருப்பியனுப்பியுள்ளனர். சில உள்ளூராட்சி சபைகளில் சபை அமர்வினை நேரலை ஒலிபரப்பு மேற்கொள்ளுகிறார்கள். அப்படி இருக்கும்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையில் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டமையானது உள்நோக்கம் ஏதோ இருப்பதாகவே கருத தோன்றுகின்றது.