யாழில் இடிந்து விழுந்த சங்கிலிய மன்னனின் மந்திரிமனையை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்பொருள் சின்னமான சங்கிலிய மன்னனின் மந்திரிமனை இன்று இடிந்து விழுந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று பெய்த இடியுடன் கூடிய கனமழையாலேயே மந்திரிமனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
அத்துடன் மந்திரிமனையைப் புனரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் யாழில் இன்றைய தினம் கொட்டிய கனமழையால் மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.
தொல்பொருள் சின்னமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட குறித்த மந்திரிமனை இடிந்து விழுந்ததையடுத்து கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு நிலமைகளை ஆராய்ந்துள்ளனர்.
யாழில் உள்ள தொல்பொருள் சின்னமான மந்திரிமனை இடிந்து விழுந்துள்ளமை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடிந்து விழுந்த மந்திரிமனையை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகரன், க.இளங்குமரன் எம்.பி யாழில் இடிந்து விழுந்த சங்கிலிய மன்னனின் மந்திரிமனையை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்பொருள் சின்னமான சங்கிலிய மன்னனின் மந்திரிமனை இன்று இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று பெய்த இடியுடன் கூடிய கனமழையாலேயே மந்திரிமனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.மந்திரிமனைக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டிருந்ததால், கட்டடங்கள் இடிந்து விழாதவாறு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன.அத்துடன் மந்திரிமனையைப் புனரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் யாழில் இன்றைய தினம் கொட்டிய கனமழையால் மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.தொல்பொருள் சின்னமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட குறித்த மந்திரிமனை இடிந்து விழுந்ததையடுத்து கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு நிலமைகளை ஆராய்ந்துள்ளனர். யாழில் உள்ள தொல்பொருள் சின்னமான மந்திரிமனை இடிந்து விழுந்துள்ளமை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.