பருவ கால சீட்டு இருந்தும் தங்களை பேருந்தில் ஏற்றிச் செல்லாமல் செல்வதாக பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் முறைப்பாடளித்துள்ளனர்.
வட்டவளை பகுதியில் உள்ள கரோலினா தோட்ட பகுதியில் இருந்து பல பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரிய,மாணவர்களே இவ்வாறு முறைப்பாடளித்துள்ளனர்.
ஹட்டன் அரச பேருந்து நிலையத்தால் காலை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பேருந்தில் தம்மை ஏற்றிச் செல்வதில்லை என அப் பகுதியில் இருந்து பல பாடசாலைகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பேருந்தினை தவறவிட்டு பட்சத்தில் காலதாமதமாக செல்ல நேரிடும் எனவும் அதிக பணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மாணவர்கள் ஹட்டன் டிப்போ அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சாரதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருவகால சீட்டு இருந்தும் ஏற்றாமல் செல்லும் பேருந்து; மாணவர்கள், ஆசரியர்கள் முறைப்பாடு பருவ கால சீட்டு இருந்தும் தங்களை பேருந்தில் ஏற்றிச் செல்லாமல் செல்வதாக பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் முறைப்பாடளித்துள்ளனர். வட்டவளை பகுதியில் உள்ள கரோலினா தோட்ட பகுதியில் இருந்து பல பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரிய,மாணவர்களே இவ்வாறு முறைப்பாடளித்துள்ளனர். ஹட்டன் அரச பேருந்து நிலையத்தால் காலை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பேருந்தில் தம்மை ஏற்றிச் செல்வதில்லை என அப் பகுதியில் இருந்து பல பாடசாலைகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பேருந்தினை தவறவிட்டு பட்சத்தில் காலதாமதமாக செல்ல நேரிடும் எனவும் அதிக பணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மாணவர்கள் ஹட்டன் டிப்போ அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சாரதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.