• Sep 19 2025

தியாகி தீலீபனின் 38வது நினைவுதினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு

Chithra / Sep 18th 2025, 12:42 pm
image


தியாகி திலீபனின் 38வது நினைவு தினம் வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுதூபியில் இன்று காலை  அனுஸ்டிக்கபட்டது.  

இதன்போது திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கபட்டு,ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யபட்ட இந்நிகழ்வில் அதன் முக்கியஸ்தர் எஸ். தவபாலன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், உறுப்பினர் தர்மரத்தினம், பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ், பொதுமக்கள், கலந்துகொண்டனர்.

இதேவேளை குறித்த பகுதியில் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை திலீபனுக்கான அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் 25ஆம் திகதி காலை முதல் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது.


தியாகி தீலீபனின் 38வது நினைவுதினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு தியாகி திலீபனின் 38வது நினைவு தினம் வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுதூபியில் இன்று காலை  அனுஸ்டிக்கபட்டது.  இதன்போது திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கபட்டு,ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யபட்ட இந்நிகழ்வில் அதன் முக்கியஸ்தர் எஸ். தவபாலன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், உறுப்பினர் தர்மரத்தினம், பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ், பொதுமக்கள், கலந்துகொண்டனர்.இதேவேளை குறித்த பகுதியில் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை திலீபனுக்கான அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் 25ஆம் திகதி காலை முதல் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement