• Sep 19 2025

பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த காட்டு யானை; பதறியோடிய பொலிஸார்- மல்லாவியில் பரபரப்பு!

shanuja / Sep 17th 2025, 8:31 pm
image

மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் திடீரென காட்டு யானை நுழைந்ததால் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மல்லாவி நகரத்தின் முக்கிய வீதியூடாக சென்ற காட்டு யானை ஒன்று நேரடியாக மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்துள்ளது.  


பொலிஸ் நிலையத்தின் கதவு திறந்திருந்தது. கதவு திறந்திருப்பதைப்  பயன்படுத்திக் கொண்டு யானை அமைதியாக உள்ளே சென்றது.


இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மறுபுறம் திடீரென பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த காட்டு யானை முறைப்பாடு அளிக்கச் சென்றதா?  என்றவாறான கேளிக்கைப் பதிவுகளும் எழுந்துள்ளன. 


அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் வீடுகளுக்குள்ளும் காணிகளுக்குள்ளும் யானை நுழைந்து அட்டகாசம் புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த காட்டு யானை; பதறியோடிய பொலிஸார்- மல்லாவியில் பரபரப்பு மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் திடீரென காட்டு யானை நுழைந்ததால் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மல்லாவி நகரத்தின் முக்கிய வீதியூடாக சென்ற காட்டு யானை ஒன்று நேரடியாக மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்துள்ளது.  பொலிஸ் நிலையத்தின் கதவு திறந்திருந்தது. கதவு திறந்திருப்பதைப்  பயன்படுத்திக் கொண்டு யானை அமைதியாக உள்ளே சென்றது.இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மறுபுறம் திடீரென பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த காட்டு யானை முறைப்பாடு அளிக்கச் சென்றதா  என்றவாறான கேளிக்கைப் பதிவுகளும் எழுந்துள்ளன. அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் வீடுகளுக்குள்ளும் காணிகளுக்குள்ளும் யானை நுழைந்து அட்டகாசம் புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement