• May 07 2024

பெருந்தோட்ட பகுதிகளில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்- மக்களே அவதானம்! SamugamMedia

Tamil nila / Mar 3rd 2023, 10:00 am
image

Advertisement

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்சீக் தோட்டத்தில் நேற்று முன்தினம் தேயிலை தொழிற்சாலையில் தேயிலை தூள் களவு போவதாக தோட்ட உதவி முகாமையாளர் கே.எல்.விஸ்வஜித் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.


அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார இது குறித்து உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுத்து உள்ளார்.


அவரது பணிப்புரை படி பொலிசார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது அதே தோட்டத்தை சேர்ந்த தேயிலை தொழிற்சாலை பழுது பார்க்கும் தொழிலாளி மற்றும் அவரது உறவினர் ஒருவரையும் தேயிலை தூள் 20 கிலோவுடனும் டீசல் 20 லீட்டருடன் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்த பட்டதாகவும் நீதிவான் சந்தேக நபர்களை எதிர் வரும் 8 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பணித்து உள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கூறுகின்றனர்.


தோட்ட முகாமையாளர் கூறுகையில் இவ்வாறு தேயிலை மற்றும் ஏனைய பொருட்கள் களவு போவதாக தோட்ட நிர்வாகம் ஏற்கனவே பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்தனர்.இது குறித்து பொலிசார் புலன் விசாரணை நடத்தி வந்தமையால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெருந்தோட்ட பகுதிகளில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்- மக்களே அவதானம் SamugamMedia மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்சீக் தோட்டத்தில் நேற்று முன்தினம் தேயிலை தொழிற்சாலையில் தேயிலை தூள் களவு போவதாக தோட்ட உதவி முகாமையாளர் கே.எல்.விஸ்வஜித் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார இது குறித்து உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுத்து உள்ளார்.அவரது பணிப்புரை படி பொலிசார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது அதே தோட்டத்தை சேர்ந்த தேயிலை தொழிற்சாலை பழுது பார்க்கும் தொழிலாளி மற்றும் அவரது உறவினர் ஒருவரையும் தேயிலை தூள் 20 கிலோவுடனும் டீசல் 20 லீட்டருடன் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்த பட்டதாகவும் நீதிவான் சந்தேக நபர்களை எதிர் வரும் 8 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பணித்து உள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கூறுகின்றனர்.தோட்ட முகாமையாளர் கூறுகையில் இவ்வாறு தேயிலை மற்றும் ஏனைய பொருட்கள் களவு போவதாக தோட்ட நிர்வாகம் ஏற்கனவே பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்தனர்.இது குறித்து பொலிசார் புலன் விசாரணை நடத்தி வந்தமையால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement