• May 06 2024

இலங்கையில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்! - வெளியான அறிக்கை

Chithra / Dec 31st 2022, 8:23 am
image

Advertisement

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையில், டிசம்பர் மாதம் முதன்மை பணவீக்கம் 57.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத் தகவல்களின்படி, நவம்பர் மாதம், முதன்மை பணவீக்கம் 61.0 சதவீதமாக காணப்பட்டது.

அதேநேரம், நவம்பரில் 73.7 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், டிசம்பரில் 64.4 சதவீதமாகவும், 54.5 சதவீதமாக இருந்த உணவல்லா பணவீக்கம், 53.4 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான பணவீக்கம் நவம்பரில் 43.7 சதவீதத்திலிருந்து, டிசம்பரில் 36.1 சதவீதமாக வீழ்ச்சிகண்டுள்ளது.

அதேநேரம், நவம்பரில் 77.5 சதவீதமாக காணப்பட்ட ஆடைகள் மற்றும் பாதணிகளுக்கான பணவீக்கம், 79.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பொதுபோக்கு மற்றும் கலாசார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பணவீக்கமானது, நவம்பர் மாதம் 62.8 சதவீதத்திலிருந்து, டிசம்பர் மாதம் 65.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுடன் தொடர்புடைய பணவீக்கம், 86.3 சதவீதத்திலிருந்து, 72.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம் - வெளியான அறிக்கை கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையில், டிசம்பர் மாதம் முதன்மை பணவீக்கம் 57.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத் தகவல்களின்படி, நவம்பர் மாதம், முதன்மை பணவீக்கம் 61.0 சதவீதமாக காணப்பட்டது.அதேநேரம், நவம்பரில் 73.7 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், டிசம்பரில் 64.4 சதவீதமாகவும், 54.5 சதவீதமாக இருந்த உணவல்லா பணவீக்கம், 53.4 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான பணவீக்கம் நவம்பரில் 43.7 சதவீதத்திலிருந்து, டிசம்பரில் 36.1 சதவீதமாக வீழ்ச்சிகண்டுள்ளது.அதேநேரம், நவம்பரில் 77.5 சதவீதமாக காணப்பட்ட ஆடைகள் மற்றும் பாதணிகளுக்கான பணவீக்கம், 79.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.பொதுபோக்கு மற்றும் கலாசார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பணவீக்கமானது, நவம்பர் மாதம் 62.8 சதவீதத்திலிருந்து, டிசம்பர் மாதம் 65.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.அதேநேரம், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுடன் தொடர்புடைய பணவீக்கம், 86.3 சதவீதத்திலிருந்து, 72.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement